இந்தியாவையே உலுக்கிய சம்பவம்!.. அந்த கதையில் நடிக்க போகும் சிவகார்த்திகேயன்?..
தமிழ் சினிமாவில் புகழ் வாய்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து ஒரு சாதாரண நடிகராக வந்து இன்று பல முன்னனி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரிசையாக நிற்கும் படங்கள் அயலான் மற்றும் மாவீரன் போன்றவை வரிசை கட்டி கொண்டு நிற்கின்றன. இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.
அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக சமீபகாலமாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் அந்தப் படத்திற்கான கதைக்களமும் கிடைத்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் படத்தின் சில காட்சிகள் பிரபல இந்திய கமெண்டரான அபினந்தன் வர்த்தமன் பற்றியதாகவும் அமைய இருக்கிறதாம். இவரை யாராலும் அவ்ளோ சீக்கிரம் மறக்க இயலாது. 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிகாரிகளால் பிடிபட்டவர் தான் அபினந்தன் வர்த்தமன். இவருக்கு ஆதரவாக அத்தனை இந்தியர்களும் தங்கள் ஆதரவையும் பிரார்த்தனையையும் வழங்கினார்கள்.
இதையும் படிங்க : அனிருத்திற்கு தடை போட்ட அப்பா!.. டெரர் பேர்வழியா இருப்பார் போலயே?..
பிறகு சில மாதங்களுக்கு பிறகு அபினந்தன் வர்த்தமன் இந்திய எல்லையில் ஒப்படைக்கப் பட்டார். அந்த அபினந்தன் வர்த்தமன் கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காமெடி, கமெர்சியல் படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.