Connect with us

Cinema News

தளபதியா மாற அடுத்த அஸ்திரம்… சிவகார்த்திகேயன் ஐடியாலாம் தனி ரகமா இருக்கே!..

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்துக்காக தேர்ந்தெடுத்து இருக்கும் வில்லன் குறித்த தகவலால் ரசிகர்கள் தளபதி நாற்காலிக்கு படுபயங்கரமான போட்டியா இருக்கே என கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் திடீரென அரசியல் கட்சியை அறிவித்தார். அதிலும் அவர் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொண்டு முழுமையான அரசியல் பணியில் ஈடுப்படுவேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் விஜய் கட்சிக்கு மாறியவுடன் அவரின் தளபதி இடம் கோலிவுட்டில் காலியாகி விடும் எனக் கிசுகிசுக்கள் எழுந்தது.

இதையும் படிங்க: 200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..

இதனால் அவரின் இடத்தினை யார் அடைவார் எனவும் பலரும் பேசிக்கொண்டு இருந்தனர். இதில் சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி எனவும் பேசப்பட்டது. அதன்படி, அவர் தன்னுடைய ரசிகர் மன்ற கூட்டத்தினையும் எப்போதும் இல்லாமல் பிரம்மாண்டமாக நடத்தினார். இது விஜயின் இடத்தினை பிடிக்க நடந்த கூட்டம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் உருவாகியது.

ஆனால் விஜய் இடத்தினை பிடிக்க நல்ல படம் தான் செய்ய வேண்டும் என்றனர். இந்நிலையில் அதற்கு முதல் விஷயத்தினை கையில் எடுத்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது திரைப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். முதலில் இந்த கதை விஜயிற்காக எழுதியதாம்.

இதையும் படிங்க: 20 வருடங்களில் யாருக்கும் கிடைக்காதது கமலுக்கு கிடைச்சது!.. இயக்குனர் சொல்றதைக் கேளுங்கப்பா!..

இருவருக்குமான காட்சிகள் மாஸ் ஹிட் அடித்தது. அதில், ஐ அம் வெயிட்டிங் இன்றளவும் வைரலாக இருக்கிறது. அந்தவகையில் மீண்டும்  சிவகார்த்திகேயன் வில்லனாக வித்யுத் கோலிவுட்டிற்கு திரும்ப இருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top