Categories: latest news

இவ்வளவு விஷயத்தையும் செஞ்சது நீதானா.?! கடுப்பாகும் சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அவரது மார்க்கெட் தென் தமிழகம் வரையில் பெரிதாக உயர்ந்துவிட்டது. தமிழ் இயக்குனர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு இயக்குனர்கள் கூட சிவகார்த்திகேயனை நோக்கி வர தொடங்கிவிட்டனர்

இதில் முதலில் தெலுங்கில் ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அனுதீப் அடுத்ததாக சிவகார்திக்கியனை வைத்து சிவகார்த்திகேயனின் 20வது படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பிரேம் ஜி வில்லனாக நடிக்கிறார் என்கிற அதிர்ச்சி செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதில் கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால்பிரேம் ஜி தமிழில் மட்டுமே வில்லன். தெலுங்கு பதிப்பில் வேறு நடிகர் வில்லன்.

இதையும் படியுங்களேன் – விஜய் சார வைச்சி நீங்க செய்யுங்க.! இவனுகள நான் செய்யுறேன்.! படக்குழு லீக் செய்த பீஸ்ட் புதிய வீடியோ.!

வில்லன் என்றால் முதல் பிரேமில் இருந்து வில்லன் கிடையாதாம். சிவகார்த்திகேயன் கூடவே இருந்து கொண்டு குழிபறித்து இருப்பாராம் பிரேம் ஜி. இறுதியில் தான் தெரியுமாம் அவரது வில்லத்தனம். இறுதியில் இவ்வளவு விஷயத்தையும் செய்தது நீயா என சிவகார்த்திகேயன் வில்லனை பழிவாங்குவது தான் இறுதி காட்சியாம்.

நமக்கு தெரிந்த வரையில் இது முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம் திரைப்படம். ஆகவே நிச்சயம் பிரேம் ஜி ஒரு காமெடி வில்லனாக தான் இருப்பார் என்கிறது சினிமா வட்டாரம்.

Published by
Manikandan