அந்த ஹீரோயினை நான் ரிசர்வ் பண்ணி வச்சிருக்கேன்.! சிவகார்த்திகேயன் அலுச்சாட்டியம்.!

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அடுத்தது தெலுங்கு தமிழ் என மாறி மாறி நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு இரு படம் நடித்து வருகிறார்.

sivakarthikeyan

அதற்கடுத்து, கமல் தயாரிப்பில் படம் நடிக்கிறார். இதற்கிடையில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் அயலான் திரைப்படம் கிடப்பில் இருக்கிறது. அதனை அடுத்து வேல்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக இருக்கிறார்.

sivakarthikeyan

இதில் வேல்ஸ் நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படத்திற்கு மண்டேலா திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தான் இயக்குகிறார். இந்த படம் எப்போது ஆரம்பிக்க போகுது என்றே தெரியாது. ஆனால் அப்படத்திற்கு ஹீரோயினை ஓகே செய்து SK புக் செய்து வைத்துள்ளாராம்.

இதையும் படியுங்களேன் - இவனுக நமக்கு தரமாட்டானுக.! இந்த திமிர் பேச்சு தான் சிம்பு ஸ்டைல்.!

ஆம், அப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்குமே என விரும்பிய சிவகார்த்திகேயன், சமந்தாவை இந்த படத்திற்காக புக் செய்துள்ளாராம். சமந்தா கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. அதனால், அவர்களுக்கு எப்போது கால்ஷீட் ப்ரீ ஆகிறதோ அப்போது தான் இந்த பட ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story