Connect with us

அடிப்பொலி.! இது வெறித்தனமான காம்பினேஷன்.! சிவகார்த்திகேயனின் புதிய பட இயக்குனர் இவரா?

Cinema News

அடிப்பொலி.! இது வெறித்தனமான காம்பினேஷன்.! சிவகார்த்திகேயனின் புதிய பட இயக்குனர் இவரா?

டாக்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட், அதனை தொடர்ந்து நேற்று வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரி , பள்ளி பருவ காலகட்டத்தில் கலாட்டாக்களை மக்கள் ரசிக்கும்படி படமாக்கியுள்ளனர்.

don

தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றி பெற்றதால், சிவகார்த்திகேயனின் அடுத்ததடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதற்கிடையில் அயலான் படம் வேறு கிடப்பில் உள்ளது.

இதையும் படியுங்களேன் – படத்தின் மொத்த கதையையும் ஒரே வீடியோவில் முடிச்சிவிட்ட தளபதி66 பிரபலம்.! கடுங்கோபத்தில் விஜய்.?

இந்த படங்களை முடிக்கவே , சிவகார்திகேயனுக்கு இந்த வருடம் முடிந்து  விடும். இதனை அடுத்து 2023இல் தான் கால்ஷீட் ப்ரீ ஆகும். அந்த சமயம் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளாராம். அது அவருக்கு பிடித்துவிட்டதாம், அந்த பட ஷூட்டிங் 20123இல் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே மாநாடு, மன்மதலீலை என ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, டாக்டர், டான் படங்களை கொடுத்த சிவகார்திகேயனும் புதிய படத்திற்காக இணைகிறார்கள் என்று தெரிந்ததும் ரசிக்கர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top