More
Categories: Cinema News latest news tamil cinema gossips

ஆடி கார் கொடுத்து சிவகார்த்திகேயனை ஆட்டைய போட நினைத்த தயாரிப்பளார்.! இது பலே திட்டம்.!

சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து அப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்தார். இந்த செய்தி கோலிவுட் முழுக்க மிகவும் பரவலாக பேசப்பட்டது.

Advertising
Advertising

இதேபோல், இதற்கு முன்னர் பல்வேறு முறை பல்வேறு முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது இயக்குனர்களுக்கோ, கதாநாயகர்களுக்கோ  பரிசு வழங்கியுள்ளனர். அப்படி ஒரு நிகழ்வு சிவகார்த்திகேயனுக்கும் நடந்துள்ளதாம்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்துகொண்டிருக்கும்போது, இவரிடம் விலை மலிவான ஒரு கார் தான் இருந்துள்ளதாம். அந்த சமயம் இவரது படங்களை தொடர்ந்து தயாரித்து வந்தது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் என்ற தயாரிப்பாளர். கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய படங்களை மதன் தயாரித்துள்ளார்.

பொதுவாக இப்படி கார் கொடுப்பது அடுத்தடுத்த படங்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பது போல தான் தமிழ் சினிமாவில் பார்க்கப்படும். அப்போது சிவகார்த்திகேயனுக்கு ஆடி காரை பரிசாக வழங்கியுள்ளாராம் தயாரிப்பாளர் மதன்.

அப்படி கார் கொடுத்து அடுத்தடுத்த படங்களில் இவரை புக் செய்ய நினைத்தாராம்.  அந்த சமயம் தான் சிவகார்த்திகேயன் படங்கள் நிதி சிக்கல் உண்டாகி அந்த படத்திற்கு இவர் ஜாமீன் கையெழுத்து போடும் நிலைமைக்கு உள்ளாகி இருந்தாராம்.

இதையும் படியுங்களேன் – விக்ரம் பேய் ஹிட்டு.! தேவர் மகன் 2, சபாஷ் நாயுடு, இந்தியன்-2.?! ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்…

பின்னர் அதில் இருந்து எப்படியோ தப்பித்து கொண்டாராம். மான் கராத்தே படத்திற்கு பிறகு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் இனி எந்த படமும் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்ட்டாரோ என்னவோ, அதன் பிறகு  தற்போது வரை சிவகார்த்திகேயன் அந்த தயாரிப்பாளரின் எந்த படத்திலும் நடிக்க வில்லை.

தற்போதெல்லாம் சிவகார்த்திகேயன் தனது நிறுவனம் மூலம் தான் படம் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறாராம். அதே போல, எந்தவித கடன் பஞ்சாயத்து பின்புலமும் இல்லாமல் இருக்கும் நல்ல கம்பெனிகளை தேர்வு செய்து அவர்களது படத்தில் மட்டும் நடித்து வருகிறாராம்  சிவகார்த்திகேயன்.

Published by
Manikandan

Recent Posts