சிம்புவுக்கு டாட்டா.! சிவகார்த்திகேயனுக்கு ஓகே.! வாரிசு நடிகை செமகெட்டி...

by Manikandan |   ( Updated:2022-08-03 01:25:50  )
சிம்புவுக்கு டாட்டா.! சிவகார்த்திகேயனுக்கு ஓகே.! வாரிசு நடிகை செமகெட்டி...
X

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன்படி, முதல் படமே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க, இப்படத்திலும் கிராமத்து பெண்ணாக நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார்.

இதையும் படியுங்களேன்- அஜித்தை பற்றி அன்றே கணித்த கேப்டன் விஜயகாந்த்… விஷயம் தெரிஞ்சி ஷாக் ஆன இயக்குனர்.!

இதனையடுத்து, இந்த படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக வெளிவந்த அறிவிப்பால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இதற்கு முன்பு அதிதி ஷங்கர் விருமன் படத்தில் நடித்திக்கொண்டிருந்த போது சிம்புவுக்கு ஜோடியாக கொரோனா குமார் படத்தில் நடிக்க வைக்க அவரிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

ஆனால், தற்போது கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எந்த விவரமும் தெரியவில்லை, இதனால், அதிதி ஷங்கர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் எப்படி இருப்பார் என படம் வெளியான பிறகு பார்க்கலாம்.

Next Story