என்ன வேணாலும் பேசிட்டு போங்க… யாருக்கும் தெரியாம சிவகார்த்திகேயன் என்ன செய்றாரு தெரியுமா?...

Actor Sivakarthikeyan: இசையமைப்பாளர் இமான் கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு மன்னிக்க முடியாத பெரிய துரோகம் செய்ததாகவும் அதனை அடுத்த ஜென்மம் ஆனாலும் தான் மன்னிக்க மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தனக்கு செய்த துரோகத்தினை தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி வெளியில் சொல்ல விரும்பவில்லை எனவும் கூறியிருந்தார். இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாக தொடங்கியது என்றுதான் கூற வேண்டும். ஆனால் இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பு எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.
இதையும் வாசிங்க:சிவாஜியே ”ப்ளாக் கோப்ரா” என அழைத்த அந்த நடிகர்..? வில்லனுக்கே பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்…
இது ஒரு புறமிருக்க சிவகார்த்திகேயன் இப்படிபட்டவரா என இவரின் ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்கள் பலர் இவர் மீது வெறுப்பை காட்டியவண்ணம் உள்ளனர். ஆனால் இமானின் முதல் மனைவியான மோனிகா சிவகார்த்திகேயன் அப்படிபட்டவர் இல்லை எனவும் இமான் தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் மீது பழி போடுவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இந்த சம்பவத்தில் எந்த அளவு நம்பகத்தன்மை இருக்கிறது என்பது குறித்து இதுவரையிலும் எந்த ஒரு செய்தியும் வரவில்லை. சிலர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தாங்க முடியாமல் பழி வாங்குவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் உலாவுகின்றன.
இதையும் வாசிங்க:அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!..
இத்தகைய செய்திகள் இவர் நடித்து வெளியாகவுள்ள அயலான் திரைப்படத்தை கண்டிப்பாக பாதிக்கும் என பலர் தங்களது கருத்தினை தெரிவிக்கின்றனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் என்னதான் இவ்வாறு கெட்டபெயர் எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் இவர் ஒரு சிறந்த மனிதர். அதாவது தான் எழுதி வெளிவரும் பாடல்களுக்கு உண்டான தொகையை இவர் வைத்து கொள்ள மாட்டாராம். அப்பணத்தினை அப்படியே மறைந்த பாடலாசிரியரான நா.முத்துகுமாரின் குடும்பத்தாருக்கு கொடுத்து விடுவாராம். நா.முத்துகுமார் இறந்ததிலிருந்தே இவர் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் அவர் குடும்பத்திற்கு செய்து வருகிறாராம்.
இதையும் வாசிங்க:ரசிகர்களை ஏமாற்றிய தங்கலான்!… மீண்டும் படையெடுக்கும் விக்ரம்… காரணம் இதுதானாம்!…