
Cinema News
பாஸ் ஒரு 50 கோடி இருக்குமா.?! சைலன்ட்டா பெரிய சம்பவம் செய்து வரும் சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் தனக்கு என்ன தெரியும், தனக்கு எது மிகவும் பிளஸ், தன்னிடமிருந்து எதனை ரசிகர்கள் அதிகமாக ரசிக்கிறார்கள் என்பதை கவனமாக அறிந்து அதற்கேற்ற திரைப் படங்களில் நடித்தால் நிச்சயம் பெரிய இடத்திற்கு செல்லலாம். அதற்கு சிறந்த உதாரணமாக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் இருக்கின்றனர்.
அந்த பெரிய இடத்தை பிடிக்க அடுத்தடுத்த கதை தேர்வுகளை கவனமாக செய்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த திரைப்படங்களின் பெரிய வெற்றிகள் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இவர் அடுத்ததாக தமிழ் – தெலுங்கு இருமொழி திரைப்படமான SK -20 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார், இதற்கிடையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் அயலான் திரைப்படமும் செயல்பாட்டில் இருக்கிறது.
இதனை தொடர்ந்து அவரிடம் கதை கூற யார் வந்தாலும், அவர்களிடம் ரகசியமாக இந்த படத்தில் எனது சம்பளம் போக, படத்திற்கான செலவு மட்டும் 50 கோடி வரை இருக்குமா என்று கேட்கிறாராம். ஏன் என்றால் அப்போது தான் படம் பெரிதாக இருக்குமாம்.
இதையும் படியுங்களேன் – விக்ரம் பார்க்க தியேட்டருக்கு விசிட் அடித்த ஷாலினி அஜித்.! நிருபர் கேட்ட கேள்விக்கு கூலான பதில்.!
படத்தின் பட்ஜெட் பெரிதாகும் போது, படமும் பெரிய அளவில் பேசப்படும். மக்களுடன் இன்னும் எளிதில் சென்றடையலாம். இதன் காரணமாகத்தான் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை விட தனது அடுத்தடுத்த பட பட்ஜெட்டில் குறியாக இருக்கிறாராம் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் கிசுகிசுக்கின்றனர்.