Cinema News
அப்பா பெருமைப்படுவாரு!.. மினி கூப்பர் காரை பரிசாக வழங்கி.. பாசமழையை பொழிந்த எஸ்.கே..
நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்காவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள பதிவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சி மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கின்றார்.
இதையும் படிங்க: அப்பா 250 கோடினா புள்ள கால்வாசியாவது வாங்கனும்ல.. ஜேசன் சஞ்சயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அமரன் திரைப்படம்:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.
படம் வெளியானது முதலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் 350 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயன் கெரியரிலேயே அமரன் திரைப்படம் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
சிவகார்த்திகேயன் லைன் அப்:
அமரன் திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்திலும், இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் சினிமாவில் படுபிஸியாக நடித்து வருகின்றார்.
பிறந்தநாள் வாழ்த்து:
சினிமாவில் என்ன தான் பிஸியாக இருந்தாலும் குடும்பத்தை மிகச் சிறப்பாக கவனித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் இருந்தது. 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தனது அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கின்றார் சிவகார்த்திகேயன். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு அக்கா. குழந்தை பெற்ற பிறகு எம்பிபிஎஸ் படிப்பது தொடங்கி 38 வயதில் தங்கப் பதக்கத்துடன் எம்டி பட்டம் பெற்றாய்.
இதையும் படிங்க: மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை வெல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்?!.. விருது பட்டியலில் அந்த படம்!….
இப்போது 42 வயதில் எஃப்ஆர்சிபி அடைந்திருக்கின்றாய். அனைத்து முரண்பாடுகளையும் தாண்டி சாதித்து இருக்கின்றாய், அப்பா உண்மையிலேயே உன்னை நினைத்து பெருமைப்படுவார். மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்போதும் அவளுடன் துணை நின்றதற்கு நன்றி அன்புள்ள அத்தான்’ என்று பகிர்ந்திருக்கின்றார். மேலும் அவரின் அக்காவுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை சிவகார்த்திகேயன் பரிசாக வழங்கி இருக்கின்றார்.