வெளியாவதற்கு முன்பே அமோக லாபம் பார்த்த சிவகார்த்திகேயன் திரைப்படம்… தயாரிப்பாளர் ஹேப்பி அண்ணாச்சி…
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும்போதே சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உண்டு. அதனை தொடர்ந்து அவர் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கியபோது அந்த ரசிகர் கூட்டம் மேலும் விரிவடைந்தது.
குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸையும் குழந்தைகளையும் மிகவும் ரசிக்கவைப்பவர் சிவகார்த்திகேயன். ஆதலால் விஜய், அஜித் திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளியை முன்னிட்டு 21 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “பிரின்ஸ்”. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேயர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அனுதீப் கே வி இயக்கியுள்ளார்.
எப்போதும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உண்டு. அதே போல் இத்திரைப்படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“பிரின்ஸ்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. “சிவகார்த்திகேயன் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி புதியதாக முயற்சி செய்திருக்கிறார்” என ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது “பிரின்ஸ்” திரைப்படம் குறித்த ஒரு அட்டகாசமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “பிரின்ஸ்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே அமோக லாபம் பார்த்துவிட்டதாம். “பிரின்ஸ்” திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவை நல்ல விலைக்கு போய் உள்ளதாம்.
“பிரின்ஸ்” திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 40 கோடி என கூறப்படுகிறது. ஆனால் இத்திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 95 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் தயாரிப்பாளர் ஹேப்பியாக இருக்கிறாராம்.