ஜஸ்ட் மிஸ்!..எஸ்கேப் ஆகிய எஸ்.கே...இனிமேலாவது உஷாரா இருப்பாரா??...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியானது. இதில் மரியா, சத்யராஜ், பிரேம்ஜி என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை அனுதீப் கே.வி. இயக்கியிருந்தார்.
அனுதீப் கே.வி. இதற்கு முன் தெலுங்கில் “ஜதி ரத்னலு” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். “ஜதி ரத்னலு” திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.4 கோடிதான். ஆனால் இத்திரைப்படம் ரூ.70 கோடி வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்துதான் சிவகார்த்திகேயன், அனுதீப் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
“பிரின்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்துள்ளது. வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவுக்கான எதிர்பார்ப்பு இத்திரைப்படத்திற்கும் இருந்தது.
ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்தை பார்த்த பலருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை குறித்து நெகட்டிவாகவே தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
எப்போதும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் காமெடிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்தில் பல காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என விமர்சனங்கள் எழுகின்றன. மேலும் திரைக்கதையில் எந்த வித புதுமையும் இல்லை எனவும் கருத்துக்கள் வருகின்றன.
இது போன்ற விமர்சனங்களால் “பிரின்ஸ்” திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு தோல்வி திரைப்படமாக அமைந்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் வணிக ரீதியாக இத்திரைப்படம் தோல்வியை தழுவவில்லை என்பதுதான் உண்மை. ஆம்!
“பிரின்ஸ்” திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி. ஆனால் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சேட்டலைட் மற்றும் ஓடிடி உரிமங்கள் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டுவிட்டது. மேலும் “பிரின்ஸ்” திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகமெங்கும் 10 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் “பிரின்ஸ்” திரைப்படம் வியாபார ரீதியாக நூலிழையில் தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கி வருகிறார். நிச்சயமாக “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயன் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் “பிரின்ஸ்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் “மாவீரன்” திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். “மாவீரன்” திரைப்படத்திலாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிவகார்த்திகேயன் பூர்த்தி செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.