சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... ஷாக்கான ரசிகர்கள்....
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து மெரினா திரைப்படம் மூலம் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றியால் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தது. தற்போது ரூ.30 கோடி சம்பளம் பெரும் நடிகராக மாறியுள்ளார்.
ஆனால், கடந்த சில வருடங்களாகவே அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அப்படத்தின் தயாரிப்பாளர் ஃபைனான்சியர்களிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் பஞ்சாயத்து நடக்க, அந்த கடனை தான் ஏற்பதாக சிவகார்த்திகேயன் கையெழுத்து போட்ட பின்னரே அவரின்படங்கள் ரிலீஸாகி வருகிறது. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் படத்தையும் சேர்த்து.. ஆனாலும், எப்படியோ சமாளித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: வலிமை படத்தில் அஜித்துக்குதான் இவ்வளவுதான் சம்பளமா?….
தற்போது சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் , தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு ரூ.98 கோடி என திரையுலகில் செய்திகள் கசிந்து வருகிறது.