விஜய் டிவியில் ஆங்கராக வேலை செய்த சிவகார்த்திகேயன் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் அவரை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது. தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார்.
இவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை பெற்றது.. அதேநேரம் அதன்பின் வெளியான மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை
. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில்தான், சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜீவா ‘சிவகார்த்திகேயன்லாம் எனக்கு போட்டியில்லை.. நான் சினிமாவில் நடிக்க வரும்போது நடிக்க வந்த தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு போன்றவர்கள்தான் எனக்கு போட்டி.. சிவகார்த்திகேயனே எனது படங்களை பார்த்து வளர்ந்ததாக என்னிடமே சொல்லியிருக்கிறார்.. எனவே அவர் எனக்கு போட்டியில்லை’ என சொல்லியிருந்தார்.
இதைப்பற்றி பல ஊடகங்களும் செய்து வெளியிட்டன.. மேலும் ஜீவாவை பேசிய அந்த வீடியோவும் சமூக வலைகளில் வைரலானது. இந்நிலையில் தனது ஐடி விங்கை பயன்படுத்தி தன்னை பற்றி நெகட்டிவாக பேசியிருப்பதாக சொல்லி அந்த வீடியோவுக்கு காப்பிரைட்ஸ் கொடுத்து நீக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
கடந்த சில வருடங்களாகவே சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு ஐடி விங்கை வைத்து நடத்தி வருகிறார்.. அவர்கள் தொடர்ந்து சிவக்கார்த்திகேயனை பற்றி சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பெருமையாக பேசுவது, அவரின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை எழுதுவது என செய்து வருகிறார்கள்.
மேலும், சிவகார்த்திகேயனுக்கு எதிராகவோ, நெகட்டிவாகவோ யாராவது கருத்தை தெரிவித்தால் ரிப்போர்ட் அடித்து அந்த வீடியோக்களை நீக்கி வருகிறார்கள்.. இசையமைப்பாளர் இமான் கூட சில வருட சிவகார்த்திகேயன் பற்றி அவதூறு சொன்னபோது அந்த வீடியோவையும் நீக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.




