என் இமேஜ் மொத்தமா காலி!.. ப்ளீஸ் அதை மாத்துங்க!.. இயக்குனரிடம் கெஞ்சிய எஸ்.கே...
டிவியில் ஆங்கராக் சில நிகழ்ச்சிகளுக்கு காம்பயர் செய்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வர பல முயற்சிகள் செய்தார். தனுஷுடன் 3 படத்தில் சின்ன வேடத்திலும் நடித்திருந்தார். ஒருவழியாக பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்தார். எதிர் நீச்சல் படமும் இவருக்கு கை கொடுத்தது. அதன்பின் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனை முன்னணி நடிகராக மாற்றியது. குறுகிய காலகட்டத்திலேயே பல நடிகர்களையும் ஓவர்டேக் செய்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
விஜய், அஜித்துக்கு பின் சிவகார்த்திகேயனுக்கே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. சில தோல்விப்படங்களையும் கொடுத்தாலும் அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். இப்போது அமரன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பெரிய இயக்குனர்கள், பெரிய பட்ஜெட் என செலக்டிவாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒருபக்கம், இசையமைப்பாளர் டி.இமான் கொடுத்த பேட்டி சிவகார்த்திகேயனின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக மாறியது. சிவா எனக்கு துரோகம் செய்துவிட்டார்.. இனிமேல் அவரின் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லி அதிர வைத்தார்.
எனவே, டி.இமான் தனது மனைவியை பிரிய சிவகார்த்திகேயனே காரணம் என பலரும் சொன்னார்கள்.ஆனால், இதுபற்றி சிவகார்த்திகேயன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக, இணைய கூலிப்படைகளை வைத்து டி.இமான் கொடுத்த பேட்டி தொடர்பான செய்திகள் இணையத்தில் டிரெண்டிங் ஆகாமல் பார்த்துக்கொண்டதாகவும் செய்திகள் கசிந்தது.
இந்நிலையில், அடுத்து நடிக்கவுள்ள ஒரு படத்தின் இயக்குனரிடம் ‘சமூகவலைத்தளங்களில் இன்னமும் என் இமேஜ் மோசமாகவே இருக்கிறது. அதை மாற்றும்படி ஒரு படம் எடுங்கள் என சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்திருக்கிறார்’ என வலைப்பேசி பிஸ்மி சொல்லி இருக்கிறார்.மேலும், ரசிகர்களிடம் தனது இமேஜை மாற்றுவதற்காகவே தனது 3வது குழந்தை தொடர்பான செய்திகளை அவர் வெளியிட்டார்’ எனவும் பிஸ்மி கூறியிருக்கிறார்.
பொதுவாக என்னை அழகாக காட்டுங்கள்.. வித்தியாசமான கதையில் நடிக்க வையுங்கள்.. எனக்கு ஒரு வெற்றிப்படம் கொடுங்கள்’ என்றுதான் இயக்குனர்களிடம் நடிகர்கள் கேட்பார்கள். ஆனால், சிவகார்த்திகேயனின் ஆசை இதுவாக இருக்கிறது