Cinema News
நான் சினிமாவில் இருந்து எப்பயோ விலகி இருப்பேன்!.. என்ன எஸ்கே இப்படி சொல்லிட்டாரு!..
நான் சினிமாவில் தற்போது வரை நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தனது மனைவிதான் என்று பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார் சிவகார்த்திகேயன்.
Actor Sivakarthikeyan: அமரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தற்போது தமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒரு ஆங்கராக தனது பயணத்தை தொடங்கி இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்து இருக்கின்றார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: இப்படி அடிச்சா என்னதான் பண்றது?!.. முருகதாஸிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் எஸ்.கே!..
அமரன் திரைப்படம்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.
300 கோடி வசூல்:
அமரன் படம் வெளியானது முதலே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளம்பி வந்தது. முதல் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்போது வரை 300 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மேலும் இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி netflix ஓடிடியில் ரிலீஸ்-ஆக இருக்கின்றது. ஓடிடியில் வெளியானாலும் படம் தொடர்ந்து திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. அமரன் திரைப்படம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. சிவகார்த்திகேயன் கெரியரிலேயே அமரன் திரைப்படம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது.
சிவகார்த்திகேயன் பேட்டி:
அமரன் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய பெயரையும் புகழையும் பெற்றிருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணம் குறித்தும், மனைவி குறித்தும் பேசியிருந்தார். ‘சினிமா துறையில் எங்கிருந்து யார் அம்பு விடுகிறார்கள் என்பது தெரியாது. எங்கிருந்து பிரச்சனை வரும் என்பது தெரியாது.
இதையும் படிங்க: எக்ஸ் விட்டு ஓடியதுக்கு இதான் காரணமா? விக்னேஷ் சிவன் உருட்டிய பொய்.. அம்பலப்படுத்திய ரசிகர்கள்
ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு போய்விடலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதை நான் என் மனைவியிடம் கூறினேன். என்னை சினிமாவை விட்டுப் போகக்கூடாது என்று சொன்னார். நான் இப்போதும் சினிமாவில் நடித்து வருகிறேன் என்றால் அதற்கு காரணம் என் மனைவி ஆர்த்தி தான். அவரின் சப்போர்ட் தான் என்னை சினிமாவில் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கின்றது’ என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.