அந்த இடத்தில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டேன்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டாக்டர். வெற்றியென்றால் சாதாரண வெற்றியல்ல கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் வெளியாகி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து சிரிக்க வைத்து வயிற்றை பதம் பார்த்து அனுப்பிய திரைப்படம்.
இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். அனிருத் இசையமைத்து இருந்தார். சிவகார்த்திகேயன் தான் இந்த படத்தை தயாரித்து இருந்தார். எப்போதும் தனது படத்தின் இறுதி வெர்சனை ரிலீஸ்க்கு முன்பே பார்த்துவிடும் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்பு தான் ரசிகர்களோடு பார்த்தாராம்.
அப்போது அனிருத் இரண்டாம் பாதியில் போட்ட பின்னணி இசைக்கு சிவகார்த்திகேயன் அழுதே விட்டாராம். அவ்வளவு அருமையாக இருந்தததாம். எப்போதும் வழக்கமாக இசை நன்றாக இருந்தால் கட்டிப்பிடித்து நன்றி சொல்வது சிவாவின் வழக்கமாம்.
ஆனால், அன்றைய தினம் சிவகார்த்திகேயன், அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தமே கொடுத்துவிட்டாராம். அந்தளவுக்கு சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தாராம். இருக்காதே பின்னே அவர்தான் படத்தின் தயாரிப்பாளர். அவர் தான் ஹீரோ அடுத்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும். வியாபாரம் பெருகும். நமக்கும் நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.