Connect with us

சிவகார்த்திகேயன் மீது கடுப்பில் எஸ்.ஜே.சூர்யா.!? மேடையில் அப்பட்டமாக தெரிந்துவிட்டதே..!

Cinema News

சிவகார்த்திகேயன் மீது கடுப்பில் எஸ்.ஜே.சூர்யா.!? மேடையில் அப்பட்டமாக தெரிந்துவிட்டதே..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் டான். இந்த திரைப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர்களில் ஒருவராக இருந்த சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தமிழகத்தில் வாங்கி வெளியிடுகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சிவாங்கி, சூரி, மிர்ச்சி விஜய், பால சரவணன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையான கதாபாத்திரம் எஸ்.ஜே.சூர்யா அவர்களுடையது இருக்குமாம். மேலும், எஸ்.ஜே.சூர்யா ‘மாநாடு’ திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். இருந்தாலும், அவரது புகைப்படங்களை டான் பட போஸ்டர்களில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனராம்.

குறைவான போஸ்டர்களில் மட்டுமே எஸ்.ஜே.சூர்யா இருக்கும்படி பார்த்துக்கொண்டனராம். மேலும், நேற்று நடந்த பட விழாவில் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்ட டிக்கெட்களில், எஸ்.ஜே.சூர்யா புகைப்படம் இடம் பெறவில்லையாம். ஆனால், சிவாங்கி, மிர்ச்சி விஜய், பாலா சரவணன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்தனவாம்.

டான் படத்தினை பற்றி மேடையில் பேசுகையில், சிவகார்த்திகேயனை பற்றியும் படத்தை பற்றியும் அதிகமாக வர்ணித்து பலரும் பேசி வந்தனர். ஆனால், எஸ்.ஜே.சூர்யா மேடையில் பேசுகையில், சிவகார்த்திகேயனை பற்றி அதிகமாக எதுவும் பேசவில்லை. அதேபோல மாநாடு படத்தில் பிரபலமாக வரும் ‘வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு’ எனும் வசனத்தை ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா பேசும்படி கேட்டுக் கொண்டனர்.

இதையும் படியுங்களேன் –தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் குழாயடி சண்டையில் விஜய்.?! இதென்ன புதுசா இருக்கு.!?

ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் தனது பேச்சை சுருக்கமாக முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டாராம் எஸ்.ஜே.சூர்யா. இதனையும் வைத்து தான் தற்போது கோடம்பாக்கத்தினர், சில செய்திகளை பரப்பி வருகின்றனர். சிவகார்த்திகேயன் மீது எஸ்.ஜே.சூர்யா வருத்தத்தில் இருக்கிறார். அதனால்தான் இவ்வாறு அவர் மேடையில் நடந்து கொண்டார் என்று கூறி வருகின்றனர்.

ஆனால், உண்மையில் இந்த விஷயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தெரிந்து விட்டால், அவரே நேரடியாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலமாகவோ அல்லது வேறு ஒரு பொது மேடையிலோ இதற்கு விளக்கம் கொடுத்துவிடுவார். எதையும் மறைத்து வைத்து பேசும் நபர் எஸ்.ஜே.சூர்யா கிடையாது என்பதும் நிதர்சனமான உண்மை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top