Sivakarthikeyan: எஸ்கே மனைவியின் காதலனை வில்லனாக களமிறக்கும் SK25 படக்குழு… உங்களுக்கு மனசாட்சி இல்லையாப்பா?

Published on: November 10, 2024
---Advertisement---

Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படக்குழு குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் எழுச்சி: சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகர் சிவா. அப்போதே பலராலும் ரசிக்கப்பட்டவர். தனுஷின் 3 திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் வந்தார். ஆனால் அவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதை அப்போதே உணர்ந்தார் தனுஷ்.

இதையும்  படிங்க: Amaran: ரஜினி படத்தையே ஓவர்டேக் பண்ண அமரன்?!… 10 நாளில் எகிறிய எஸ்கே-வின் மார்க்கெட்!…

உடனே தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் எதிர்நீச்சல் திரைப்படத்தை தயாரித்தார். 3க்கு பின்னர் ஹீரோவாக மெரினா, மனம் கொத்தி பறவை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ அவதாரத்தை உயர்த்தியது எதிர்நீச்சல் திரைப்படம் தான்.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். பெரிய அளவில் ஹிட்டை கொடுக்கவில்லை என்றாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

அமரன் பிளாக்பஸ்டர்: இருந்தும் சமீப காலமாக சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவருடைய இமேஜும் பெரிய அளவில் டேமேஜ் ஆகி இருந்தது. இந்நிலையில் தான் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை படமான அமரனில் நடித்தார்.

இத்திரைப்படம் அவருடைய சினிமா கேரியரின் கிராப்பை பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறது. அமரன் திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

இதையும்  படிங்க: Lyca: பெரிய நடிகர்களின் ஆதரவை இழக்கும் லைக்கா!.. இப்படியே போனா இழுத்து மூட வேண்டியதுதான்!..

nivin

இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலியை களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் வில்லனாக அவர் நடிக்க வைக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம். அமரன் நாயகி சாய் பல்லவியின் முதல் மலையாள படமான பிரேமம் படத்தில் ஹீரோவாக நிவின் பாலி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.