
Cinema News
பேசி பேசியே தன் நண்பனை கண்ணீர் விட்டு கதற வைத்த சிவகார்த்திகேயன்.! அப்படி என்ன சொன்னார்.?
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்து தயாராகி உள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார். வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் தான் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த படம் பாலிவுட்டில் வெளியான ஆர்டிகிள் 15 என்கிற சூப்பர் ஹிட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் உதயநிதி, போனி கபூர் , சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி என பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய சிவகார்த்திகேயன் , ‘ மிகவும் உருக்கமாக பேசினார். இவன் நம்ம கூடத்தானே படிச்சான் பிறகு எப்படி கனா, நெஞ்சுக்கு நீதி எல்லாம் எடுக்குறான்’ என காமெடியாகவும் பேசினார். மேலும் பேசுகையில், அருண்ராஜாவை பார்த்து, ‘ நீ சிந்துவை (கொரோனாவில் இறந்து போன அருண்ராஜாவின் மனைவி ) ரெம்ப மிஸ் செய்வாய் என தெரியும். ‘
இதையும் படியுங்களேன் – வெற்றிமாறனுக்காக தனுஷ் இறங்கி செய்த செயல்.! பழசெல்லாம் மறந்துடீங்களா.?!
‘ கவலைப்படாதே அவங்க உன் கூட தான் இருக்காங்க. எங்க பட விழா என்றால் முதல் ஆள் சிந்து தான் கிளம்பி இருப்பாங்க ‘ என கூறும் போதே அருண்ராஜா மேடையில் கண்ணீர் விட்டு அலுத்துவிட்டார். தண்ணீர் கொடுத்ததும் வேண்டாம் என மறுத்து, கண்ணீர் அதிகமாக வழிந்தோடும் அளவுக்கு அழுதுவிட்டார் இயக்குனர் அருண்ராஜா காமராஜா.
இருந்தாலும், தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் மேடையில் இருந்து கீழே இறங்கினர்.