வாண்டேடா வந்து ஆப்பு வைக்கிறது இதுதான்...சிவகார்த்திகேயன் செயலால் புலம்பும் இளம் இயக்குனர்...

by சிவா |
ayalan
X

சில இளம் இயக்குனர்கள் முதல் படத்திலேயே திரையுலகை திரும்பி பார்க்க வைப்பார்கள். அப்படி தன்னுடைய ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் ரசிகர்களை மட்டுமல்ல. அட யாருடா இவர்? என நடிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் இளம் இயக்குனர் ரவிக்குமார்.

சயின்ஸ் பிக்சன் திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்ட ரவிக்குமார் அப்படத்தையும் அப்படித்தான் எடுத்திருந்தார். கால எந்திரம் (Time Machine) மூலம் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி சென்று கதாநாயகன் சில பிரச்சனைகளை தீர்ப்பது போல் கதையமைத்திருந்தார். அவர் திரைக்கதை அமைத்திருந்த விதத்தை பலரும் பாராட்டினர். இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது.

indru

அந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரவிக்குமாரை அழைத்து அவரை பாராட்டியதோடு, உங்கள் இயக்கத்தில் நான் நடிக்கிறேன் ஒரு கதையை ரெடி பண்ணுங்க, இப்படத்தை நானே தயாரிக்கிறேன் எனக்கூற அப்படி உருவான திரைப்படம்தான் அயலான்.

ayalan

இதுவும் ஒரு சயின்ஸ் பிக்சன் கதைதான். ஏலியன் இந்தியாவுக்கு வருவது போல கதை அமைத்திருந்தார் ரவிக்குமார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். மேலும், ரகுல் ப்ரீத்சிங், யோகிபாபு, கருணாகரன், இஷா கோபிகர் என பலரும் நடித்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

ravikumar

ஆனால், கடனில் சிக்கிய சிவகார்த்திகேயன் அந்த கடன்களை அடைப்பதற்காக வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க துவங்க. அயலான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் கே.ஜே.ஆர் ராஜேஷ் என்கிற தயாரிப்பாளரிடம் இப்படம் கை மாறியது. இப்படியே தற்போது 6 வருடங்கள் போய்விட்டது.

ayalan

இப்போதும் பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்வோம் எனக்கூறி தயாரிப்பாளர் மற்றும், அப்பட இயக்குனர் ரவிக்குமார் என எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ரவிக்குமாரின் முதல் படம் வெளியாகி 7 வருடம் ஆகிவிட்டது. அயலான் படத்தை நம்பி வேறு படத்தையும் அவர் கமிட் செய்யவில்லை.

வளர்ந்திருக்க வேண்டிய தன்னை சிவகார்த்திகேயன் அழைத்து இப்படி வாழ்க்கையை பாழாக்கி விட்டாரே என புலம்புகிறாராம் ரவிக்குமார்.

Next Story