அடேங்கப்பா!.. அமரன் படத்த விட டபுள் மடங்கு பட்ஜெட்டா?!.. மாஸாக தயாராகும் எஸ்கே25!...

by ramya suresh |   ( Updated:2024-11-25 23:14:49  )
sk25
X

sk25

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் புறநானூறு திரைப்படத்தின் பட்ஜெட் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படத்தின் மூலமாக ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள்.

இதையும் படிங்க: அம்மா, கிரிஷை வீடு மாற்றிய ரோகிணி… கோபியை கேள்வி கேட்ட இனியா… உண்மையை உடைத்த தங்கமயில்…

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படம் வெளியான மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்து அமரன் திரைப்படம் சாதனை படைத்த நிலையில் தற்போது 25 நாட்களில் 300 கோடி ரூபாயை கடந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

அமரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்துவிட்டு டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் பாஸ் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க போகும் திரைப்படம் புறநானூறு.

sk25

sk25

இந்த படத்தில் நடிகர் சூர்யா முதலில் கமிட்டாகி பின்னர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலிலா நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதே போல அதர்வா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். அமரன் திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு புறநானூறு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவுல முதன்முதலா ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரம்… அப்பவே அது சூப்பர்ஹிட் படமாச்சே!

மேலும் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கும் திரைப்படமாக எஸ்கே25 படம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 150 கோடி முதல் 200 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நடிகர்களின் சம்பளம் இல்லாமல் படத்தின் பட்ஜெட் மட்டும் 150 கோடி என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தற்போது எஸ்கேப் 25 படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கின்றது.

Next Story