Categories: latest news

SK: தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி!… அமரன் வெற்றி நிகழ்ச்சியில் புகழ்ந்த SK… இத நம்பலாமா?!…

அமரன் திரைப்படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி இருந்த அமரன் திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கின்றார் ராஜ்குமார் பெரியசாமி.

மேலும் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கின்றது. படம் வெளியானது முதலே மக்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களையும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. மேஜர் முகுந்த் வரதராஜர் அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

Dhanush

மேலும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கிட்டதட்ட 200 கோடி வசூலை நெருங்கி வருகின்றது. சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் அமரன் தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அதை தொடர்ந்து தற்போது கேரளா, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெற்றி நிகழ்ச்சியை படக்குழுவினர் செய்து வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற ஃபேன்ஸ் மீட்டிங்கில் ஒருவர் ‘பூமி என்ன சுத்துதே’ அந்த பாடலில் ‘ஜோக்கர் இப்போ ஹீரோ ஆன’ என்கின்ற வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஜோக்கராக இருந்து ஹீரோவான தருணம் எது என்று பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையும் படிங்க: போட்ட முதலயே எடுக்க திணறும் பெக்கர் பிரதர்!… சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் லக்கி பாஸ்கர்!..

இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் இந்த வரியை எழுதின நடிகர் தனுஷ் சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்தான் இந்த பாடலை எழுதினார். கேட்டவுடனே கடகடவென்று எழுதி கொடுத்து விட்டார். ரசிகர்கள் எனக்காக கத்தும் போது, முதல் நாள் காட்சியில் என்னை பார்த்து ஆர்ப்பரிக்கும் போது ரசிகர்கள் என்னை கொண்டாடும் ஒவ்வொரு தருணத்திலும் நாமும் ஹீரோ ஆகிவிட்டோம் என்பது தோன்றும் என்று சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.

இதையும் படிங்க: TVK Vijay: ‘யாரை கேட்டுடா நாயே உள்ளே வந்த’… தவெக மாநாட்டால் டிரைவருக்கு நடந்த கொடுமை!

சமீப நாட்களாக நடிகர் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும், இருவரும் பேசிக் கொள்வது இல்லை என்று கூறி வருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த அமரன் திரைப்படத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தனுஷ் மட்டும் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் வெற்றி விழாவில் நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ramya suresh

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago