பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் சிவகார்த்திகேயன்… செம்மையா இருக்குமே!!

by Arun Prasad |
பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் சிவகார்த்திகேயன்… செம்மையா இருக்குமே!!
X

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக திகழ்ந்த சிவகார்த்திகேயன் “மெரினா” என்ற திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் “3” திரைப்படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்தார்.

“3” திரைப்படத்திற்கு பிறகுதான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கத்தொடங்கினார். “மனம் கொத்தி பறவை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா” ஆகிய திரைப்படங்களில் நடித்த பிறகு சிவகார்த்திகேயன் நடித்த “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படம் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

அதன் பின் ஒரு சிறந்த என்டெர்டெயினராக இன்றுவரை ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அஜித், விஜய் திரைப்படங்களுக்கு பிறகு திரையரங்குகள் திருவிழா போல் காணப்படுவது சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்குத்தான். குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸை தனது கைக்குள் வைத்திருப்பவர். மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் திகழ்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேயர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் சமீபத்தில் வெளிவந்தது. அனுதீப் கே வி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த ஒரு சுவாரசிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் சேலத்துக்கு அருகே உள்ள சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இத்தகவலை பத்திரிக்கையாளர் சி.சக்திவேல் பகிர்ந்துள்ளார்.

Next Story