இனி சரிப்பட்டு வராது... காத்திருந்து கடுப்பான சுதா கொங்கரா... பொசுக்குன்னு கூட்டணி மாத்திட்டாங்களே...?
சுதா கொங்கரா இயக்க இருந்த புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய புகழை பெற்றவர் சுதா கொங்கரா. இதையடுத்து இரண்டாவதாக நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
லாக்டவுன் சமயத்தில் ஓடிடி-யில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பல தேசிய விருதுகளை வென்று குவித்தது. இவர் தற்போது இப்படத்தின் இந்தி ரீமிக்ஸை அக்ஷய் குமாரை வைத்து எடுத்திருந்தார். ஆனால் இப்படம் கடந்த ஜூலை 12-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் அடுத்ததாக தமிழில் இவர் புறநானூறு என்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் பெரிய படம் என்பதால் கால்ஷீட் அதிகமாக தேவைப்படுகின்றது.
சூர்யா வேற தற்போது பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் அதிக அளவு கால்ஷீட்டுகளை கொடுக்க முடியாத சூழலில் இருக்கின்றார். இதனால் அவர் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று பலரும் கூறிவந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தான் இந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று கூறிவருகிறார்கள்.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தின் கதை பிடித்துப் போன காரணத்தால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாராம். மேலும் இந்த திரைப்படத்தை ஆகாஷ் கிருஷ்ணன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.