அந்த குறும்படத்துக்கு ஆஸ்கர் கிடைச்சதுதான் பெருமை! – ஆர்.ஆர்.ஆர் படத்தை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்..!
தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு என ஒரு ரசிக பட்டாளமே உருவாகியுள்ளது. போன வருடம் அவர் நடித்து வெளியான டான் திரைப்படம் சினிமாவில் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.
தற்சமயம் மாவீரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் முழு படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டன. அடுத்தக்கட்ட டப்பிங், எடிட்டிங் வேலைகள் பாக்கி இருக்கின்றன என கூறியிருந்தார்.
மாவீரனுக்கு அடுத்து நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் தயாராகும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
ஆஸ்கர் குறித்து சிவகார்த்திகேயன் பதில்:
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஆனால் பலரும் அது காசு கொடுத்து வாங்கிய விருது என கூறுகிறார்கள். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.
சிவகார்த்திகேயன் அதற்கு பதிலளிக்கும்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை அப்படியே தவிர்த்துவிட்டு இந்தியாவில் இருந்து ஒரு குறும்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் என கூறிவிட்டார். சிவகார்த்திகேயனுக்கும் கூட ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் பெரிதாக திருப்தி இல்லையோ? என்கிற கேள்வி எழுகிறது.
பேட்டியில் அயலான் திரைப்படம் வெகு காலமாக வெளியாகவில்லையே? எப்போது வெளியாகும் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. அடுத்த வருடம் அயலான் வெளியாகும் என கூறியுள்ளார்.