தனக்குத்தானே ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்!..சொன்னத கேட்டுருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா?..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கைவசம் நிறைய படங்களை வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
தீபாவளி அன்று இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளிவருகிறது. அது போக மாவீரன் படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை அடுத்து ராஜ்கமல் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார். இப்படி வரிசையாக பல படங்களில் நடித்தாலும்
இதையும் படிங்க : சின்ன சின்ன ஆசை பாடல் ஒரு விளம்பரத்தின் காப்பியா? கசிந்த தகவல்…
ஆரம்பத்தில் இவருக்கு கைகொடுத்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மற்றும் ரஜினி முருகன் திரைப்படம் ஆகும்.இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த இரு படங்களையும் இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் சீமராஜா படமும் கூட.
ஆனால் சீமராஜா படம் அட்டர் ப்ளாப். ஆனால் பொன்ராம் சீமராஜா படத்தின் ஒன்லைன் கதையை சொல்லும் போது ஒரு கோழையான ஹீரோ தன் மூதாதையர்களின் வீரத்தை அறிந்து அதன் பின் வீரனாக மாறுகிறான் என்ற கதையை சொல்லியிருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் அப்போது தான் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்ததால் கோழையாக எப்படி என்று கதையையே மாற்றியிருக்கிறார். அதன் படி படம் வெளிவர ரிசல்ட் என்னவென்று அனைவருக்கும் தெரியும். இதை ஒரு வீடியோவில் சிவகார்த்திகேயன் சொல்லும் போது சீமராஜா படத்தில் ஹீரோ கோழையாக இருந்து அதன் பின் வீரனாக மாறுவது மாறி அமைந்திருந்தால் படம் வேற லெவல் ஹிட் ஆயிருக்கும் என அந்தர் பல்டி அடித்தார்.