உடைந்த மனநிலையில் முடங்கி கிடக்கும் சிவகார்த்திகேயன்!.. ஓவரா ஆட்டம் போட்டா இப்படித்தான்!..
மிமிக்ரி கலைஞராக தனது கேரியரை துவங்கி அப்படியே விஜய் டிவியில் ஆங்கரக சில வருடங்கள் வேலை செய்து அதன்பின் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் பாண்டிராஜ் இவரை ‘மெரினா’ என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றி அவரை முன்னணி நடிகராக மாற்றியது.
சில வருடங்கள் வேகமாக வளர்ந்து பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நடிகராக மாறி மற்ற நடிகர்களை பொறாமைப்பட வைத்தார். தான் நடித்த சில படங்களை அவரே தயாரிக்க போய் நஷ்டம் ஏற்பட்டு ரூ.100 கோடி வரை கடனாளி ஆனார். தான் நடிக்கும் 4 படங்களின் சம்பளத்தையும் கொடுத்துவிடுகிறேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இதுவரை 25 கோடியை மட்டுமே கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இமான் பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே தலை காட்டிய சிவகார்த்திகேயன்.. செம போட்டோ!
ஒவ்வொரு முறை அவரின் படம் வெளியாகும்போதும் இந்த பஞ்சாயத்து அவரின் கழுத்தை பிடிப்பதுண்டு. ஆனால், எதையாவது செய்து தப்பித்து வருகிறார். ஒருபக்கம், சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி அவரை காலி செய்துவிட்டது. இமானின் விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான் என எல்லோரும் பேச அவரின் இமேஜ் ரசிகர்களிடம் மொத்தமாக டேமேஜ் ஆனது.
ஒருபக்கம், இமான் சொன்ன குற்றச்சாட்டால் அவரின் வீட்டிலும் பிரச்சனை என சொல்லப்படுகிறது. மனைவி மற்றும் உறவினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறாராம். அதோடு, வெளியே எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சிவகார்த்திகேயன் அவருக்கு வரும் செல்போன் அழைப்புகளை கூட எடுப்பது இல்லையாம். கமலின் தயாரிப்பில் அவர் நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் அப்படியே நிற்கிறது.
ஒருபக்கம் இமான் சொன்ன குற்றச்சாட்டு.. ஒருபக்கம் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி.. மறுபக்கம் வீட்டிலும் பிரச்சனை என்பதால் இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என தெரியாமல் சிவகார்த்திகேயன் தவிர்த்து வருகிறாராம். இதையடுத்து, ஓவரா ஆட்டம் போட்டு, தேவையில்லாத வேலையெல்லாம் செஞ்சா இப்படித்தான் நடிக்கும் என திரையுலகில் பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா!.. மறுபடியும் வசமா சிக்கிய சிவகார்த்திகேயன்!.. இவ்ளோ சீப்பான ஆளா அவர்?..