சிவகார்த்திகேயன், உதய நிதியை தூக்கி விட்டதே இந்த நடிகைதான்...! அப்போ அவங்க உழைப்பு இல்லையா ஆரி சார்..?
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய கடின உழைப்பால் மக்கள் மனதிலும் சரி சினிமாவிலும் சரி ஒரு தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து நிற்கிறார்.
அதே போல தன்னுடைய பின்புலம் அரசியல் என்றாலும் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என நோக்கத்துடன் வந்தவர் நடிகரும் அரசியல் வாரிசுமான உதய நிதி. அரசியலில் இருந்தாலும் சினிமாவிலும் நல்ல வரவேற்புள்ள நடிகராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள படம் மகா. பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இதை பாராட்டும் விதமாக பேசிய நடிகர் ஆரி சிம்புவிற்கு ஒரு பெரிய சல்யூட். லீடு ரோலில் ஹன்சிகா நடித்தாலும் எனக்கும் இதில் பங்கு இருக்கு என பெருந்தன்மையாக வந்து நடித்த சிம்புவுக்கு பாராட்டு என கூறி
அதே சமயம் இதே மாதிரி ஹன்சிகாவும் பெருந்தன்மையாக இரு படங்களில் ஹீரோக்களுக்காக நடித்து அந்த படமும் வெற்றி பெற்றது என கூறினார். அந்த சமயம் ஹன்சிகா டாப்பில் இருந்தாலும் சிவகார்த்திகேயன், உதய நிதியுடன் சேர்ந்து நடிக்க நடிகைகள் மறுத்த சமயத்தில் பெருந்தன்மையாக இவரே முன்வந்து நடித்து அந்த படங்களை வெற்றிப் படங்களாக்கினார். மேலும் சிவகார்த்திகேயனும் இன்று எட்ட முடியாத உயரத்திற்கும் சென்று விட்டார் எனக் கூறினார்.