ரெண்டுமே ஒரே ப்ராடக்ட் தான்.. ஆனால் இப்படி ஒரு போட்டியா?.. சிவகார்த்திகேயன் வாய்ப்பை தட்டிபறித்த சந்தானம்..

by Rohini |
siva
X

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் இன்று கொண்டாடக்கூடிய நடிகராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். இவரின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய செய்திகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். விஜய் தொலைக்காட்சியில் காம்பேரிங் செய்து கொண்டுதனது குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தவர் காலப்போக்கில் வெள்ளித்திரையில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

அவருக்கு வாய்ப்புக் கொடுத்ததே தனுஷ் தான். மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக முதன் முதலில் நடித்தார். அதனை அடுத்து தன் விடா முயற்சியால் இன்று இந்திய அளவில் மதிக்கக் கூடிய நடிகராக மாறியிருக்கிறார். இந்த நிலையில் அதே விஜய் தொலைக்காட்சியில் வந்த சந்தானமும் முதலில் காமெடியனாக அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல நகைச்சுவை நடிகர் என்ற பேரை பெற்றிருந்தார்.

siva1

sivakarthikeyan santhanam

ஆனால் ஒரு காலகட்டத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து நாமும் விஜய் தொலைக்காட்சியியில் அவருக்கு சீனியராக இருந்து இன்னமும் காமெடியனாக ஜொலித்தால் எப்படி என ஹீரோ டிராக்கிற்கு மாறினார். ஆனால் அவரை ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை விட அந்த லுக்கிற்கு அவர் செட்டாக வில்லை என்றே சொல்லலாம்.

இது ஒரு வித ஈகோ என்றே சொல்லலாம். அதன் மூலம் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்த ‘யாயா’ என்ற படத்தில் மிர்ச்சி சிவாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தானாம். ஆனால் நகைச்சுவை நடிகராக சந்தானம் இருந்ததால் சிவகார்த்திகேயன் நடித்தால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

siva2

sivakarthikeyan santhanam

அப்போது சந்தானம் நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு சீனியர் என்பதால் சந்தானம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு பதிலாக மிர்ச்சி சிவாவை நடிக்க வைத்திருக்கின்றனர். அதே போல அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்திலும் ஜெய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது சிவகார்த்திகேயன் தானாம்.

இதையும் படிங்க : சிவாஜிக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கா?? என்ன இருந்தாலும் அவரும் ஒரு மனுஷன்தானே!

அந்த நேரமும் சந்தானத்தின் பிடிவாதத்தால் சிவகார்த்திகேயனை கமிட் செய்யாமல் ஜெய்யை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். இதில் அட்லீ சிவகார்த்திகேயனின் நண்பன் என்பதையும் தாண்டி இந்தப் படத்திற்கு சந்தானத்தின் காமெடி மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்பதற்காக நண்பனை விட கதை தான் முக்கியம் என சிவகார்த்திகேயனை ரிஜெக்ட் செய்தாராம் அட்லீ.

Next Story