சிவகார்த்திகேயனுக்கும் சிம்புவுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?...உண்மையில் நடந்தது இதுதான்....
தமிழ் சினிமாவில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர், ரஜினி மற்றும் கமல், அஜித் மற்றும் விஜய் இந்த கூட்டணியில் தான் சினிமாவே தற்போது நகர்ந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் கூட்டணியை இன்று வரை யாராலும் அசைக்க முடியவில்லை. மூன்று தலைமுறைகளாக இவர்களின் பின்னனியில் தான் போய்க் கொண்டிருக்கிறது.
இவர்களுக்கு பிறகு அவர்களை போன்று யார் அந்த மாதிரி இடத்தை பிடிக்க போகிறார்கள் என்பதில் பெரிய போட்டியே நடந்து கொண்டு இருக்கிறது. சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம் , அருண் விஜய் போன்ற நடிகர்கள் இருந்தாலும் அவர்களை போன்று இன்னும் நிலையான அந்தஸ்தை பெற வில்லை.
ஆனால் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி என இவர்களுக்குள் போட்டி இருப்பது போன்று இணையத்தில் சில தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அது சிவகார்த்திகேயன், சிம்பு என உருமாறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணத்தை வலைப்பேச்சு அந்தனன் தெளிவாக கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் படமான ‘டான்’ படத்தின் மொத்த வசூலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. அதே நேரத்தில் டான் படத்திற்கு முன்பே வெளியான சிம்புவின் மாநாடு படத்தின் வசூலை அந்த படக்குழு டான் படத்தோடு வெளியிட்டது.இதைப் பார்த்த ரசிகர்கள் சிம்புவா? சிவகார்த்திகேயனா? என பேச ஆரம்பித்தனர். உண்மையில் மாநாடு படத்தின் வசூலை அப்பொழுதே கேட்டு வந்தனர். அவர்கள் கொடுப்பதற்கு தாமதமாக்கியதால் டான் படத்தின் வசூலை வெளியிடும் போது இந்த படத்தின் வசூலையும் வெளியிட வேண்டியதாயிற்று என கூறினார். மற்றபடி போட்டி எல்லாம் இல்லை எனவும் தெரிவித்தார்.