Cinema News
ரஜினியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!.. சண்டையில சட்ட கிழிஞ்சிரும் பரவால்லயா!..
சூப்பர்ஸ்டார் பட்டம்
தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வரும் ஒரே ஆசை ‘நாம் அடுத்த ரஜினி ஆக வேண்டும்’ என்பதுதான். எல்லோருக்கும் ஏன் ரஜினி மீது ஆசை எனில் திரையுலகில் ரஜினி செய்த சாதனைகள் அப்படி.. அவரின் பாய்ச்சல் அப்படி. சின்ன சின்ன வேடங்களில் நடித்து, வில்லனாக நடித்து, பின்னர் ஹீரோவாக மாறி, ஆக்சன் படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராகவும் மாறியவர். 30 வருடங்களுக்கும் மேல் ஆகியும் சூப்பர்ஸ்டார் இன்னமும் அவரிடம்தான் இருக்கிறது. அந்த பட்டத்துக்காகத்தான் எல்லோரும் ஆசைப்படுகின்றனர்.
விஜய், சிவகார்த்திகேயன்
இதில் முக்கியமானவர்கள் விஜயும், சிவகார்த்திகேயனும் என தாராளமாக சொல்லலாம். விஜயும் துவக்கம் முதலே ரஜினி ரூட்டில்தான் பயணித்தார். இன்னசண்ட்டாக நடிப்பது, அதிரடி சண்டை காட்சிகளில் நடிப்பது, குழந்தைகளுக்கு பிடிப்பது போல நடிப்பது என அவரின் படங்களை கவனித்தால் இது தெரியும். ஏனெனில், குழந்தைகளுக்கு பிடித்துவிட்டால் அவர்தான் சூப்பர்ஸ்டார் என்பதுதான் கணக்கு.
இதையும் படிங்க: ஹீரோவாதான் நடிப்பேன்னு சொல்லிட்டு இப்படி பண்லாமா மோகன்!.. போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..
80,90களில் குழந்தைகளிடம் ரஜினி ஸ்டைல் செய் என்றால் ஸ்டைலாக தலை முடியை கோதி காட்டும். அதுதான் ரஜினி ஏற்படுத்திய தாக்கம். இப்போது இதைத்தான் விஜயும், சிவகார்த்திகேயனும் செய்து வருகின்றனர். விஜய் இதை எப்போது செய்து ஓரளவுக்கு சாதித்தும் விட்டார். வாரிசு படம் ரிலீஸின் போது விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்ட்டார் என அப்படத்தின் தயாரிப்பாளர் பேசியபோது அதை மறுக்காமல் ரசித்தவர்தான் விஜய்.
அடுத்த சூப்பர்ஸ்டார்
ஒருபக்கம், சிவகார்த்திகேயனின் மாவீர்ன் பட விழாவில் பேசிய நடிகை சரிதா சிவகார்த்திகேயனை பார்த்தால் எனக்கு ரஜினியை போலவே இருக்கிறது. அதனால் அவரை குட்டி ரஜினி என்றுதான் அழைப்பேன் என சொல்ல சமூகவவலைத்தளங்களில் இது ட்ரோல் ஆனது. அதே விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ‘ரஜினி மாதிரிலாம் இல்ல.. ரஜினியேதான்’ என சொல்ல ரஜினி ரசிகர்கள் அவரையும் ட்ரோல் செய்தனர்.
ரஜினி முள்ளும் மலரும், ஜானி, எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 35 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் ஹீரோவாக இருக்கிறார். இப்போதும் சூப்பர்ஸ்டார் அவர்தான். அவருடன் எப்படி சிவகார்த்திகேயனை ஒப்பிடலாம் என பலரும் திட்டி வருகின்றனர்.
ரஜினி காப்பி
ரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம். அவர் வேற லெவல் என சிவகார்த்திகேயன் பேசினாலும் அவருக்குள்ளும் ரஜினியாக வேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இல்லை. அவர் போகும் ரூட்டும் அதுதான். ரஜினியாக ஆசை இல்லையெனில் அவர் நடித்த படங்களான வேலைக்காரன், மாவீரன் ஆகிய தலைப்புகளை தனது படங்களுக்கு ஏன் வைக்க வேண்டும். ரஜினி முருகன் என்று கூட தலைப்பு வைத்தார்.
இதையும் படிங்க: மந்திரக்கட்டா? கேட்கவே பயங்கரமா இருக்கு! சினிமாவில் மனோரமா சிம்மாசனம் போட்டு உட்கார இதுதான் காரணமா?
சினிமாவுக்கு வருவதற்கு முன் சிவகார்த்திகேயன் மிமிக்ரி கலைஞராகவும் இருந்தார். பல மேடைகளில் ரஜினியை மிமிக்ரி செய்துள்ளார். எனவே, அந்த ஆசை வருவது இயல்புதான். ஆனால், ரஜினி கடந்து வந்த பாதை என்ன?.. எப்படியெல்லாம் அவர் ரசிகர்களையும், குழந்தைகளையும் கவர்ந்து சூப்பர்ஸ்டார் ஆனார் என்பதை பார்க்க வேண்டும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் ரஜினி நடித்துள்ளார். அவருக்கு ஜப்பானில் கூட வெறித்தனமான ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். அவரின் படம் ரிலீஸ் ஆகும்போது ஜப்பானில் இருந்து வந்து சென்னையில் படம் பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ரஜினியின் சாதனை சாதாரணமானது அல்ல. இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக அவர் இருக்கிறார்.
அதை இப்போதுள்ள சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை சண்டை போட்டுத்தான் தீருவேன் என்றால் சட்டை கிழிவது நிச்சயம்..
இதையும் படிங்க: ரஜினி கமலேயே வாடா போடான்னு பேசிய கவுண்டமணி!.. இந்த நடிகரை மட்டும் அப்படி பேச மாட்டார்!..