பண்றத எல்லாம் பண்ணிட்டு சாரி வேற.. இமான் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்
Iman Sivakarthikeyan: கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்த சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்திற்குள் ஒரு மாஸ் நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் அதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக இருந்து பிரபலமான சிவகார்த்திகேயன் மூணு என்ற படத்தின் மூலம் தனுஷால் அறிமுகம் செய்யப்பட்டார்.
அதில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார் .தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற நகைச்சுவை கலந்த குடும்ப பங்கான படங்களில் நடித்து விஜய் மாதிரியே குடும்ப ஆடியன்ஸை கவர்ந்தார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: எல்லா அங்கிளிலும் செம ஹாட்டு!.. டாப் கிளாஸ் கிளாமரில் தூக்கி அடிக்கும் கீர்த்தி சுரேஷ்!..
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. அதாவது இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே இருந்த அந்த மோதல் வெடித்து பூதாகரமாக கிளம்பியது. சிவகார்த்திகேயனை பற்றி பல புகார்களை இமான் கொடுத்திருந்தார். கூடவே இருந்து துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் பத்திரிகை பேட்டிகளில் கூறியிருந்தார் இமான்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அளித்த ஒரு பழைய பேட்டி ஒன்று இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் ‘நான் சாரி சொல்லணும்னா அது கண்டிப்பா இமான் அண்ணனுக்கு தான் சொல்லணும். நான் கொஞ்சம் படங்கள்ல பிஸியா இருக்கிறதுனால அவரை பார்க்க முடியாமல் பேச முடியாமல் போயிடுச்சு.
இதையும் படிங்க: அந்த விஷயத்துக்கு ஐடியா சொன்ன வைரமுத்து… பாவம்… அவருக்கே தெரியாதாம்..!
அது அவருக்கும் அப்செட் ஆயிடுச்சு. நான் அவரை அண்ணான்னு தான் கூப்பிடுவேன். அவரும் என்னை தம்பினு தான் கூப்பிடுவார். அது ஒரு ஜெனியூனான ரிலேஷன்ஷிப். எந்த ஒரு ஈகோவும் இருக்காது .அதேபோல் அவர் மேல் அண்ணன் என்ற ஒரு பயம் எனக்கு இருந்து கொண்டே தான் இருக்கும் ’என அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.