Connect with us
sivakarthikeyan

Cinema News

இரண்டு சூப்பர் ஹிட் படங்களை மறுத்த சிவகார்த்திகேயன்…..

திரையுலகில் நுழையும் அனைவருமே சாதனை படைப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் போராடி திரையுலகில் நுழைந்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சாதாரண தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் எட்டியுள்ள உயரம் சாதாரணமானது அல்ல.

இதுவரை ஹீரோவாக மட்டும் இருந்த சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் என்ற ஒற்றை படம் மூலம் ஒரு மாஸ் ஹீரோவாக உயர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமும் டாக்டர் படம் தான். கிட்டத்தட்ட 100 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்துள்ளது.

premam

premam

சிவகார்த்திகேயன் திரை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ள டாக்டர் படம் அவரை அடுத்த கட்டத்தை நோக்கி அழைத்து சென்றுள்ளது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் அவரை தேடி வந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை வேண்டாம் என கூறி மறுத்து விட்டாராம்.

அதன்படி மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளனர். அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அழ வைகுந்தபுரம்லு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவும் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு வந்துள்ளது.

sivakarthikeyan

sivakarthikeyan

ஆனால் சிவகார்த்திகேயன் இந்த இரண்டு படங்களும் வேண்டாம் என கூறி வாய்ப்பை மறுத்து விட்டாராம். காரணம் கேட்டால் ரீமேக் படங்களில் ஆர்வம் இல்லை என கூறி வருகிறாராம். ஒரு வேளை டாக்டர் போன்ற ஃபிரஷ்ஷான ஸ்கிரிப்ட் இருந்தால் தான் நடிப்பாரோ என்னமோ. ஒவ்வொரு நடிகரும் ஒரு பாலிசியை ஃபாலோ செய்து வருகிறார்கள். அதேபோல் சிவகார்த்திகேயன் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற பாலிசியை ஃபாலோ செய்கிறார் போல.

google news
Continue Reading

More in Cinema News

To Top