சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படம் இது…? ஹிட் மூவி… ஜஸ்ட் மிஸ்…
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர்களின் வசூல் நாயகனாகவும் வலம் வருகிறார்.
எனினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “பிரின்ஸ்” திரைப்படம் வணிக ரீதியாக வரவேற்பை பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்தது.
சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் எப்போதும் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் “பிரின்ஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. மேலும் “பிரின்ஸ்” திரைப்படத்தின் திரைக்கதை வழுவாக எழுதப்படவில்லை எனவும் விமர்சகர்கள் கூறிவந்தனர். எனினும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் “மாவீரன்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியபோதே அவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அதனை தொடர்ந்து “மெரினா” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
சிவகார்த்திகேயனும் இயக்குனர் அட்லியும் பல ஆண்டுகளாகவே நெருங்கிய நண்பர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு அட்லி இயக்கிய “முகப்புத்தகம்” என்ற குறும்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அஜித் குமார் நடித்த “ஏகன்” திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருந்தார். இந்த நிலையில் அட்லி இயக்கிய முதல் திரைப்படமான “ராஜா ராணி” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம்.
ஆனால் சில காரணங்களால் சிவகார்த்திகேயன் அத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இதனை தொடர்ந்துதான் ஆர்யா, ஜெய் ஆகியோர் அத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.