பட்டதெல்லாம் போதும் சாமி.! சோறு கட்டிக்கொண்டு ஆபிசுக்கு கிளப்பும் சிவகார்த்திகேயன்.!

by Manikandan |
பட்டதெல்லாம் போதும் சாமி.! சோறு கட்டிக்கொண்டு ஆபிசுக்கு கிளப்பும் சிவகார்த்திகேயன்.!
X

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவரது திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக உள்ளது.

சிவகார்த்திகேயன் தனது வேலையில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருப்பவர். தனது படம் ரிலீசாக வேண்டும் என்று பல நேரங்களில் தனது சம்பளத்தை கூட விட்டுக்கொடுத்து, ஜாமீன் கையெழுத்து முதற்கொண்டு போட்டு தனது படத்தை ரிலீஸ் செய்ய உதவியுள்ளார்.

அப்படி பல உதவிகள் செய்து சில நேரங்களில் மாட்டிக்கொண்டும் உள்ளார். அதன் காரணமாகவோ என்னவோ அவர் தனது சூட்டிங் இல்லாத நேரத்தில் தனது ஆபீசுக்கு வந்து விடுவாராம்.

தனக்கு ஷூட்டிங் இல்லை என்றால் போயஸ் கார்டனில் உள்ள தனது அலுவலகத்திற்கு காலையிலேயே வந்து விடுவாராம். அதுவும் மதியத்திற்கு சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுவாராம். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் கணக்கு வழக்கு பார்த்துவிட்டு தான் செல்வாராம்.

இதையும் படியுங்களேன் - ரெண்டு மடங்கு வேணும்.! பாலிவுட்டை அதிரவைத்த சன் பிக்ச்சர்ஸ்.! ரெம்ப அதிகம்தான்.!

சில நேரங்களில் கணக்கு வழக்கு பார்க்க நேரம் ஆயினும் பரவாயில்லை என்று இரவு அங்கேயே தங்கி மறுநாள் வீட்டிற்கு செல்வாராம்.

ஏற்கனவே பட்ட கடன், கணக்கு வழக்குகள் போன்ற அனுபவத்தால் தற்போது சிவகார்த்திகேயன் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றனர். எது எப்படியோ தனது வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்து உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஒரு முன்னுதாரணம்.

Next Story