அறிமுகம் கொடுத்தவருக்கே அல்வா கொடுத்த சிவகார்த்திகேயன்.. இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ.?!
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் "மெரினா". இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் தான் இயக்கி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
இந்த படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டு படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறலாம்.
இந்த நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் மீண்டும் ஒரு கதையை தயார் செய்துவிட்டு அதனை சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளாராம். அந்த கதையை கேட்ட சிவகார்த்திகேயன் கதை நல்லா இருக்கு என்னால் கால்ஷீட் இப்போது கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதையும் படியுங்களேன்- சமந்தாவை அலேக்காக தூக்கி சென்ற பாலிவுட் ஹீரோ.. வீடியோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி..,,
சிவகார்த்திகேயனை ஹீரோவாக மெரினா படத்தில் அறிமுக படுத்தியதே இயக்குனர் பாண்டிராஜ் தான், அதைபோல் அவருக்கு நம்ம வீட்டு பிள்ளை என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்ததும் அவர்தான்.
இப்படி இருக்கையில், அறிமுகம் கொடுத்தவருக்கே கால்ஷீட் இல்லை என்று சிவகார்த்திகேயன் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இப்போவே சிவகார்த்திகேயன் இப்படி செய்கிறார் இதுயெல்லாம் எங்கேபோய் முடியப்போகுதோ என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்க படுகிறது.