Connect with us

Cinema News

RRR-ஐ கண்டு தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்.! பேருல மட்டும் தான் ‘டான்’.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு ரெடியான திரைப்படம் “டான்”. இந்த திரைப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி முடித்துள்ளார் கல்லூரி காதல் கலாட்டா திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

don2

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதியை சில தினங்களுக்கு முன்னர் லைக்கா நிறுவனம் வெளியிட்டது. மார்ச் மாதம் 25 ஆம் தேதி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது படக்குழு.

sivakarthikeyan

அதேபோல, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த “RRR” இந்த திரைப்படமும் மார்ச் 25-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதில், என்ன பிரச்சினை என்றால் “RRR” திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது.

இதையும் படியுங்களேன்அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகரா வருடாவருடம் என்ன செய்கிறார் பாருங்கள்.!

இந்நிலையில். அவர்கள் தயாரிக்கும் படமும் தான் வெளியிடும் திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் தங்களுக்கு பிரச்சினை என்பதை லைக்கா உணர்ந்தது. தற்போது, இரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு உள்ளதாள் தான் வெளியிடும் RRR திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க முடியாது என்ற காரணத்தால் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ரிலீசை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்து விட்டதாம்.

rrr

அதனால், மார்ச் 25ஆம் தேதி டான் படத்தின் ரிலீஸ் இருக்காது என தற்போது கூறப்படுகிறது. அவர்கள் மே-6ஆம் தேதி அல்லது மே இரண்டாம் வாரத்தில் டான் திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளனராம். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top