சேலையில் குத்துவிளக்கா இருந்தாங்க.. மாடர்ன் டிரெஸில் சிவகார்த்திகேயன் மனைவி!

by Rohini |
siva 2
X

siva 2

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது ஏஆர் முருகதாஸுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த அமரன் திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆகுவதாக சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை குதூகலப்படுத்தி வந்தார் சிவகார்த்திகேயன். அதன் பிறகு ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற பல ஷோக்களில் பங்கு கொண்டார். அவருடைய தனி திறமையாக விளங்குவது மிமிக்கிரி.

இதையும் படிங்க: கோட் படம் ஓடிடியில் இப்படிதான் வெளியாகும்… சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு

அதை திறம்பட செய்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் சிவகார்த்திகேயன். இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது. இப்படி சின்ன திரையில் ஒரு முன்னணி ஆங்கராக வலம் வந்த சிவகார்த்திகேயன் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அவர் முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகமான திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படம் தான். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ஒரு மாபெரும் நடிகராக உயர்ந்தார்.

இதையும் படிங்க: இளையராஜா நேரில் பார்க்க ஆசைப்பட்ட ஒரே சினிமா பிரபலம் இவர்தான்!.. ஆனா நடந்ததே வேற…

இப்போது ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் தனது சொந்தத்திலேயே பெண்ணை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள். சமீபத்தில் தான் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. இவருடைய மனைவி ஆர்த்தி எப்பொழுதுமே தமிழ்நாட்டு கலாச்சாரமான சேலையிலேயே வருவதை வழக்கமாக கொண்டவர்.

arthi

arthi

எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் பொது இடங்களுக்கு வந்தாலும் பெரும்பாலும் சேலை அணிந்து தான் வருவார். இந்த நிலையில் பேண்ட், சர்ட் அணிந்த மாதிரியான புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அது முன்பு எடுத்த பழைய புகைப்படம் மாதிரி தான் தோன்றுகிறது. சிவகார்த்திகேயனும் மனைவி ஆர்த்தியும் ஒன்றாக இருப்பது போல அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: என்கிட்ட அப்படி சொன்னாரு!.. அதனால விஜய பார்க்க போகவே இல்ல!.. ராதாரவி கோபம்!..

Next Story