உடம்பை ஏற்றி சிக்ஸ் பேக்கில் மிரள வைக்கும் எஸ்.கே!.. சிம்புவுக்கே டஃப் கொடுப்பார் போலயே!..
டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ‘மெரினா’ திரைப்படம் மூலம் நடிகராக மாறி்யவர் சிவகார்த்திகேயன். அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானதோடு கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறினார். ரஜினி, விஜய் ரூட்டில் பயணித்து குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகவும் மாறினார்.
அவ்வப்போது சறுக்கல்கள், தோல்விகள் வந்தாலும் நம்பிக்கையுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றியை கொடுத்து மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார். பல வருடங்களாக அவரை துரத்தி வந்த 100 கோடி கடனை கூட ஒருவழியாக கட்டி முடித்துவிட்டார். அயலான் படத்தோடு அவரின் எல்லா கடனும் தீர்ந்து போய் நிம்மதி அடைந்திருக்கிறார்.
இதையும் படிங்க: அடுத்த விஜய் நீதான்!.. ஏத்திவிடும் நட்பு வட்டாரம்!.. தளபதி ஆகும் கனவில் காய்நகர்த்தும் எஸ்.கே…
இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியிலும் நடந்தது. இந்த படத்திற்காக மீசை, தாடியெல்லாம் மழித்து ஒரு ராணு வீரராகவே சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார்.
இதுவரை எந்த படத்திற்காவும் சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி செய்து உடலை ஏற்றியது இல்லை. ஆனால், இது ராணுவ வீரர் என்பதால் இவரும் சிம்பு ஸ்டைலில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து உடலை இளைத்து ஃபிட் ஆக மாறியிருக்கிறார். அதோடு, வி சேப்-பில் ஏற்றிய உடம்பை புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய்.. விஜய் சேதுபதி.. விஜயகாந்த்!.. கோலிவுட்டில் அதிகரிக்கும் டீஏஜிங்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான்!..
மேலும், ‘பெரிதாக கனவு காணுங்கள்.. எதையும் நேர்மறையாக யோசியுங்கள்.. கடுமையாக உழையுங்கள்.. மற்றும் பயணத்தை அனுபவியுங்கள்’ என கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் எஸ்.கே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கதைக்கு தேவைப்பட்டால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடம்பை ஃபிட் ஆக மாற்றுவதை சில நடிகர்கள் செய்து வந்தனர். தற்போது அதில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார். அவரின் உடம்பை பார்க்கும்போது கண்டிப்பாக சிக்ஸ் பேக் வைத்திருப்பார் என கணிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் துவங்கவுள்ளது.