நான் நடிச்சதுல மோசமான படம் அதுதான்!...உண்மையை பகிரங்கமாக சொன்ன SK...!
சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து முடித்து ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவி புகழ் சிவாங்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது. அதற்காக சிவகார்த்திகேயன் மிகவும் பிஸியாக இருக்கிறார். இதனிடையில் சிவகார்த்திகேயனை ஒரு இணைய சேனல் நேர்காணல் எடுத்த போது அப்போது அவர் ஆச்சரியப்பட வைக்கும் அளவில் சில தகவல்களை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில் என்னுடைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைக்கும் என கூறும்போது தொகுப்பாளர் நீங்கள் சொல்வது சீமராஜா தானே என குறுக்கிட்டார். அதற்கு சிவகார்த்திகேயன் சீமராஜாவா? அந்த படம் கலவையான விமர்சனம் பெற்ற படமெல்லாம் இல்ல, சும்மா அடிச்சு தொம்சம் செய்யப்பட்ட மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்ற படம் என வெளிப்படையாக கூறினார்.
இதையறிந்த இணையவாசிகள் எந்த ஒரு நடிகரும் தான் நடித்த படங்களை பற்றி இவ்ளோ மோசமா சொல்ல மாட்டாங்க் ஆனால் ஒரு பெரிய இடத்தில் இருந்தாலும் இப்படி வெளிப்படையாக பேசியது வியப்புக்குறியது என பாராட்டி வருகின்றனர்.