இயக்குனரிடம் பொய் சொல்லி வசமாக சிக்கிய டாக்டர் பட நடிகர்....!
பொதுவாக ஒரு படம் என்றால் அந்த படத்தில் ஹீரோ பல சாகசங்கள் செய்ய வேண்டி இருக்கும். உதாரணமாக சண்டை காட்சிகளில் சில நேரங்களில் அந்தர் பல்டி கூட அடிக்க நேரலாம். இல்லையெனில் பைக் அல்லது கார் போன்ற வாகனங்களை ஹீரோவே இயக்க வேண்டி இருக்கும். இப்படி ஹீரோவிற்கென ஒரு சில தனி திறமைகள் இருக்க வேண்டும்.
இப்படி உள்ள நிலையில் பிரபல ஹீரோ ஒருவர் தனக்கு பைக் வீலிங் தெரியும் என இயக்குனரிடம் பொய் சொல்லி சிக்கியுள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த நடிகர் வேறு யாருமல்ல நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் தாங்க. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்போது டாப் நடிகராக வளர்ந்துள்ளவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அவர் திரைக்கு வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை கடந்து விட்டார். சமீபத்தில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அவரின் முதல் படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி மெரினா படத்தின்போது இயக்குனர் பாண்டிராஜ் உங்களுக்கு பைக் வீலிங் தெரியுமா என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் தெரியும் காலேஜ் படிக்கும்போது செய்திருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
ஆனால் நிஜமாகவே அவருக்கு பைக் வீலிங் தெரியாதாம். படப்பிடிப்பிற்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் அதற்குள் கற்றுக் கொள்வோம் என நினைத்திருக்கிறார். ஆனால் மறுநாளே இயக்குனர் பாண்டிராஜ் ஷூட்டிங்கிற்கு வர சொல்லி ஷாக் கொடுத்து விட்டாராம். இதனால் சிவகார்த்திகேயன் வேறு வழியின்றி தனக்கு பைக் வீலிங் தெரியாது என உண்மையை கூறியுள்ளார்.