இந்த ரெண்டு படமும் வரட்டும்!.. சிவகார்த்திகேயன் ரேஞ்சே வேற!. ஸ்கெட்ச் போட்டு வேலை பாக்கும் எஸ்.கே..

பல மேடைகளில், சின்ன சின்ன விழாக்களில் மிமிக்ரி செய்து வந்தவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளுக்கு விஜே-வாக இருந்தார். அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே பல கம்பெனிகளிலும், இயக்குனர்களிடமும் போய் வாய்ப்பு கேட்டார்.
தனுஷ் நடித்த 3 படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். அதன்பின் மெரினா படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன்பின் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்தார். தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடி லாபத்தை கொடுத்தது.
அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், ரஜினி முருகன் படத்தின் வெற்றியும் அவரை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது. அதன்பின் ரெமோ, காக்கி சட்டை என பல படங்களிலும் நடித்தார். இதில், டாக்டர், டான், மாவீரன் போன்ற படங்கள் வெற்றியை பெற்றது.
சிவகார்த்திகேயேன் படமென்றால் காமெடி கலந்த காதல் கதை என்பதுதான் ஃபார்முலா. அதிலிருந்து விலகி ஹீரோ என்கிற படத்தில் நடித்தார். அதில் சூப்பர் மேன் போன்ற கதாபாத்திரம் அவருக்கு. ஆனால், அதிலும் காதல் இருந்தது. அந்த படம் ஓடவில்லை. டாக்டர் படத்தில் வழக்கம்போல் நடிக்கவில்லை என்றாலும் அதிலும் காதல் இருந்தது.
அதாவது சிவகார்த்திகேயன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற இமேஜ் இருக்கிறது. தற்போது அதை மாற்ற விரும்புகிறார் எஸ்.கே. இப்போது அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் அவரின் இமேஜை மாற்றும் என சொல்லப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் டெரரான ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை பார்த்தாலே அந்து புரியும்.
அதேபோல், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திலும் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வழக்கமாக சூரி, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு போன்றவர்களோடு சேர்ந்து காமெடி செய்வார் எஸ்.கே. இப்போது சூரி ஹீரோவாகிவிட்ட நிலையில் ஆக்ஷன் ரூட்டை பிடித்திருக்கிறார் எஸ்.கே. இது அவரின் இமேஜை மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.