இந்த ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டா சோலி முடிஞ்சது!.. ஓவர் ஆட்டம் போடும் சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan: டிவியில் தொகுப்பாளராக வேலை செய்தவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே முயற்சிகள் செய்தார். தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் அவரின் நண்பராக கூட நடித்திருந்தார். பாண்டிராஜ் காட்டிய இரக்கத்தில் அவர் இயக்கிய மெரினா படத்தில் நடித்தார்.
எதிர் நீச்சல் படம் இவருக்கு நல்ல பேரை வாங்கி தந்தது. அதேநேரம் இவர் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதன்பின் ரெமோ, ரஜினி முருகன், மான் கராத்தே என நடித்து பிரபலமானார். அதன்பின் அவர் பிஸியான நடிகராக மாறினார்.
இதையும் படிங்க: தலைவரோட அடுத்த படக்கதை இப்படித்தான் இருக்குமாம்!… மனைவிக்கு ஆப்பு அடிக்காம இருந்தா சரிதான்…
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான். சந்தானத்தை கூட ஹீரோவாக ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் சிவகார்த்திகேயனை ஏற்றுக்கொண்டனர். இவரின் சினியர் நடிகர்களான கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி போன்ற நடிகர்களை அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வரை வசூல் செய்தது. அதேநேரம், இடையிடையே தோல்விப்படங்களையும் கொடுப்பார். இவரின் நடிப்பில் வெளியான சீமராஜா, மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியது.
இதையும் படிங்க: பப்ளிசிட்டி தேடுவதில் தலைவரும், சிஷ்யனும் ஒன்னுதான்!.. மீண்டும் ரஜினியை சீண்டும் புளுசட்ட மாறன்….
இப்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். கேள்விப்பட்ட வரையில் சிவகார்த்திகேயன் ரூ.35 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், தனது சம்பளத்தை இரண்டு மடங்காக அதாவது ரூ.70 கோடி உயர்த்தலாமா என யோசித்து வருகிறாராம்.
ரஜினி, விஜய், அஜித் எல்லாம் ரூ.100 கோடி சம்பளத்தை தாண்டிவிட்டனர். இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் அடித்தால் ரூ.100 கோடியை தாண்டி வசூலாகிறது. ஒருபக்கம், மற்ற மொழி உரிமைகள், இசை உரிமை, சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகியவையும் பல கோடிக்கு விற்பனை ஆகிறது. இதையெல்லாம் கணக்கு போட்டுதான் சிவகார்த்திகேயன் சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பார் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோடி கோடியா கொடுத்து ஏன் கஷ்டப்படுறீங்க? சம்பளத்தில் இப்படி ஒரு ஆஃபரா? தனிக்காட்டு ராஜாவா ஜேக்கி