Sivakarthikeyan: கமலை கைக்காட்டி நைசாக நழுவிய சிவகார்த்திகேயன்.. கேரளாவில் பங்கம் பண்ணிய எஸ்கே

sivakarthikeyan
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய், அஜித்துக்கு அடுத்த படியாக இவரைத்தான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, கதைகளை தேர்ந்தெடுப்பதில் சரி மிக கவனமாக செயல்பட்டு வருகிறார். ஒரு கைத்தேர்ந்த நடிகர் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படித்தான் சிவகார்த்திகேயனும் தன்னுடைய கெரியரை தக்க வைக்க அக்கறையுடன் கையாண்டு வருகிறார்.
அமரன் திரைப்படத்திற்கு பிறகு இவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன. சினிமாவில் முக்கிய இயக்குனர்களாக கருதப்படும் இயக்குனர்களுடன் தான் இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்கராவுடன் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில் கேரளாவில் இருக்கும் பினராயி என்ற ஊரின் பெருமையையும் பண்பாட்டையும் விளக்கும் வகையில் பினராயி பெருமா 2025 என்ற பெயரில் ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசும் போது சிவகார்த்திகேயன் கேரளாவை பற்றியும் கேரளா சினிமாவை பற்றியும் பெருமையாக பேசினார்.
அதில் முக்கியமாக கமல் கூறியதை அந்த மேடையில் பேசி கைத்தட்டல்களை பெற்றார் சிவகார்த்திகேயன். கேரளா சினிமாவை பற்றி கமல் கூறும் போது கேரளாவில் தான் நல்ல பெர்ஃபார்மன்ஸ் உள்ள நடிகர்கள் இருப்பதாகவும் பெரிய கேரக்டர் சின்ன கேரக்டர் என பார்க்காமல் எந்த கேரக்டர் இருந்தாலும் நடிக்க முன் வருகிறார்கள் என்று கமல் ஒரு சமயம் கூறினாராம்.
இதை சிவகார்த்திகேயன் அந்த மேடையில் பேசி கைத்தட்டல்களை பெற்றார் .ஆனால் கமலை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் என்று அவருக்கே தெரிந்திருக்காது. நல்ல பெர்ஃபார்மன்ஸ் உள்ள நடிகர்கள் கேரளாவில்தான் இருக்கிறார்கள் என்று சொல்லி தமிழ் நடிகர்களின் பெருமையை கீழே போட்டு மிதித்துவிட்டார் கமல்.