தோல்வி படத்துலயே மாஸ் காட்டியவரு விஜய்! சிவகார்த்திகேயனுக்கு இது ரிஸ்க்கான விஷயம்தான்..

parasakthi
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி மற்றும் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக போகிறது என்ற ஒரு தகவல் பரவிக் கொண்டு வருகிறது. ஜனநாயகன் படத்தை பொறுத்தவரைக்கும் அதிகாரபூர்வமாக பொங்கல் ரிலீஸ் என அறிவித்து விட்டார்கள். இந்த நிலையில் இந்த இரு படங்களின் ஒரே ரிலீஸ் தேதி என்பது எந்த வகையில் சாத்தியமாகும் என்பதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியிருக்கிறார்.
அதாவது இரு பெரிய நடிகர்களின் படங்களை பற்றி வதந்திகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். ஜனவரி 9 ஜனநாயகன் என்பதை அவர்கள் அறிவித்து விட்டார்கள். பராசக்தி படம் பொங்கலுக்கு வரும் என்று சொல்லி இருக்கிறார்கள். பொங்கல் என்று சொல்லும்போது அதிலிருந்து ஒரு மூன்று நாள் கழித்து கூட வரலாம். அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி மூன்று நாள் இடைவெளியில் பராசக்தி திரைப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
ஆனால் விஜய் படத்தோடு ஒரு படம் மோதுகிறது என்றால் அது ஒன்று ரஜினி படமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அஜித் படமாக இருக்க வேண்டும். அதுதான் தாங்கும். வேறு யாரு வந்தாலும் அங்கு நிற்க முடியாது .இதுதான் காலம் காலமாக நடந்து வருகிற ஒரு விஷயம். சிவகார்த்திகேயன் இப்போது வருகிறார் .அவருக்கு இல்லாத மார்க்கெட்டா? அவருக்கு இல்லாத கூட்டமா என்று பல பேர் இப்படி எல்லாம் கூறி வருகிறார்கள். சிவகார்த்திகேயனோடு விஜயை ஒப்பிடவே முடியாது. விஜய் எங்கேயோ இருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்பொழுதுதான் அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் .
அப்படி இருக்கும் பொழுது ஒரே நாளில் ரிலீஸ் எனும் போது சிவகார்த்திகேயன் இந்த முடிவை எடுப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படியே சிவகார்த்திகேயன் ‘இல்ல சார் நாங்கள் இரண்டு பேரும் ஒரே நாளில் வர வேண்டாம்’ என்று சிவகார்த்திகேயன் சொன்னாலும் அதைக் கேட்கிற நிலைமையில் படக்குழுவும் இல்லை. ஏனெனில் படத் தயாரிப்பாளர்கள் இரண்டு பேருமே பல கோடிகளை இதில் தூக்கி போட்டு இருக்கிறார்கள்.
அப்போ அந்த பணத்தை எங்கே ரிலீஸ் செய்தால் ஒட்டுமொத்த பணத்தையும் எடுக்கலாம் என்றுதான் யோசிப்பார்களே தவிர விஜய் வரும் போது மோத வேண்டாம் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். இதில் ஒரு வேளை ஜனநாயகனை விட பராசக்தி படம் மிகவும் நன்றாக இருந்து அந்த படம் ஓடி விட்டது என்றால் விஜயவே ஜெயித்தவன் என்று சொல்லிக்கலாம் .அதுக்கு கூட ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
ஆனால் என்ன இருந்தாலும் விஜயினுடைய தோல்வி படமே வந்து பட்ஜெட்டை மீட்டுக் கொடுத்து விடும். அப்படித்தான் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். வாரிசு படம் எல்லாம் ஒரு தோல்வி படம்தான் .ஆனால் போட்ட பட்ஜெட்டை எடுத்துக் கொடுத்த படமாக தான் அமைந்தது. அப்படி இருக்கும் பொழுது விஜயுடன் சிவகார்த்திகேயன் மோதுவது என்பது ஒரு ரிஸ்க்கான விஷயம்தான் என அந்த பேட்டியில் அந்தணன் கூறி இருக்கிறார்.