Connect with us

திரைக்கு வரும் முன்பே ஓடிடியில் பெரிய லாபம் பார்த்த சிவகாத்திகேயன் படம்

Cinema News

திரைக்கு வரும் முன்பே ஓடிடியில் பெரிய லாபம் பார்த்த சிவகாத்திகேயன் படம்

நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் நாளை (09.10.2021) திறைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை ஓடிடி நிறுவனம் ஒன்று 11 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. முன்னதாக சாட்டிலைட் உரிமையைப் பிரபல தொலைக்காட்சி பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதால் தயாரிப்பாளர் காட்டில் மழைதான் போல…

கொரோனா காலகட்டத்தில் ஓடிடி மூலம் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே தியேட்டரில் படம் வெளியான சில வாரங்களே ஓடிடியில் படம் வெளி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுவும் 11 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்தைக் கைப்பற்றியுள்ளது.

அதேபோல், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை அதிக தொகைக்கு சன் டிவி பெற்றுள்ளது. திரைக்கு வரும் முன்பே டாக்டர் படம் கல்ல கட்டி வருவதால் இந்த படத்தின் உரிமையாளர் மகிழ்ச்சியில் உள்ளானர். மேலும், தியேட்டர் விற்பனை, ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை என டாக்டர் படம் கிட்டத்தட்ட 57 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top