Cinema History
இது உருப்படாத தொழில்!.. போய் படிக்குற வேலைய பாருடா!.. மனோபாலாவிடம் கத்திய சிவக்குமார்!
சினிமாவில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் நடிகர்கள் நிறைய பேர் சென்னை வருவது உண்டு. நிறைய கஷ்டப்படுவார்கள். அவர்கள் எல்லாருக்கும் அந்தக் கனவு நனவாகி விடாது. ஒரு சிலருக்குத் தான் அந்த யோகம் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகரும், இயக்குனருமான மனோபாலா. அவர் தனது சினிமா உலகில் நுழைந்த சுவாரசியமான அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
எனக்கு ஆரம்பத்தில் சினிமாவிலும், ஓவியத்திலும் தான் ஆர்வம். நான் சிறுவயதில் இருந்தே டிராயிங் நல்லா வரைவேன். அதனால எனக்கு சென்னை ஆர்ட்ஸ் காலேஜ்ல படிக்க ஆசை. அங்கு 5 நாள் தேர்வு நடந்தது. அதில் நான் செலக்ட் ஆனேன். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. காலேஜ் சேர்ந்ததும் நடிகர் சிவகுமாரும் பெரிய ஓவியர்னு கேள்விப்பட்டு அவரை சந்திக்க முயற்சி செய்தேன். அவரை நேரில் போய் பார்த்தேன்.
அப்போது சிவக்குமார், இங்க வந்து படிக்க வந்துருக்க… இது உருப்படாத தொழில். போய் படிடா… இந்தத் தொழிலுக்கு வந்துருக்கேன்னாரு. நானே தொழிலை மாத்திட்டேன். அவரு எனக்கு அட்வைஸ் பண்ணினாரு. ஆனாலும் மனசு கேட்கல. நான் 5 வருஷம் அங்கே போய் படிச்சேன். சாயங்காலம் சிவகுமாரைப் போய் பார்ப்பேன். இடையில கமல்ஹாசனை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது.
என்னோட காலேஜ்ல படிச்ச பையன் கலை. அவனோட அப்பா பெரிய மோல்டர். அதனால சூட்டிங்லாம் கூட்டிட்டுப் போவாங்க. அப்போ சூரியகாந்தி படத்தோட சூட்டிங் நடந்தது. அங்கு தங்கப்பன் மாஸ்டர் சாங் எடுத்துக்கிட்டு இருக்காரு. ஜெயலலிதா மேடம் நடிச்சிக்கிட்டு இருக்காங்க. அங்கு தங்கப்பன் மாஸ்டரிடம் வேலை பார்க்குற ஒருத்தர் இருந்தாரு. அவர் தான் கமல்ஹாசன். அவருக்கிட்ட தொடர்பு கிடைச்சது. கமல் நடிக்க ஆரம்பிச்சிட்டாரு.
பாலசந்தரின் எல்லா படங்களையும் பக்கத்தில் இருந்து அவர் டைரக்ஷன் பண்ணியதைப் பார்த்தேன். பெயிண்டிங் படிச்சி ஆர்ட் டைரக்டரா வரணும்னு நினைச்ச எனக்கு பாலசந்தரைப் பார்த்ததும் டைரக்டரா ஆகணும்னு தோணுச்சு. 16 வயதினிலே படத்தையும், முள்ளும் மலரும் படத்தையும் பார்க்கும் போது யாரிடம் சேர்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் ஒருநாள் கமலே என்னை பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.