Categories: Cinema News latest news

ஜோதிகாவிற்கு கம்பேக் கொடுத்த படம்.. ஆனால் சிவக்குமார் இப்படி சொல்லுவாருனு நினைக்கல!

தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஜோதிகா. ஆரம்பத்தில் தமிழ் கூட சரியாக பேசத் தெரியாத நடிகை இன்று ஒரு பாரம்பரிய குடும்பத்தில் மருமகளாக இருந்து வருகிறார். இவருடைய நடிப்பு அந்த அளவுக்கு பேசப்படாவிட்டாலும் இவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

siva1

தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்டவர் நடிகை ஜோதிகா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்ற படங்களாகவே அமைந்திருக்கின்றன. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா இப்பொழுது தன்னுடைய குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு வருகிறார்.

திருமணமாகி ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கம் பேக் கொடுத்த படம் 36 வயதினிலே. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து உமன் சென்ரிக் என்ற படங்களிலேயே ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

siva2

காற்றின் மொழி படம் அனைவருக்கும் பிடித்தமான படமாக அமைந்தது. குடும்ப உறவுகளை மையப்படுத்தியும் ஒரு பெண் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தனக்கான லட்சியத்தை அடைவதற்கான முயற்சியையும் பற்றிய படமாக இந்த படம் அமைந்தது. இந்தப் படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக விதார்த் நடித்திருந்தார்.

இதையும் படிங்க : இசையமைப்பாளர் எல்லாம் பாடுனா எப்படி வெளங்கும்?!.. அனிரூத்தை தாக்கி பேசிய பிரபல பாடகர்…

படத்தைப் பார்க்க ஜோதிகாவின் குடும்பமும் விதார்த்தத்தின் குடும்பமும் தியேட்டருக்கு வந்தார்களாம். அப்போது சூர்யா மிகவும் பெருமையாக பேசினாராம். அது மட்டும் இல்லாமல் சிவக்குமார் அந்தப் படக்குழுவை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தாராம். அப்போது விதார்திடம் சிவக்குமார் ஜோதிகா ஒரு பொம்பள சிவாஜி என்று ஜோதிகாவின் நடிப்பை மிகவும் பெருமையாக சொன்னாராம். இதை ஒரு பேட்டியில் விதார்த் கூறினார்.

siva3
Published by
Rohini