எம்.ஜி.ஆர் படமா?!.. சிவாஜி படமா?!.. ஒரே நேரத்தில் வந்த வாய்ப்பு!.. தடுமாறிய சிவக்குமார்!..

Actior Sivakumar: திரையுலக மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். ஏனெனில், எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர் இவர். 80 வயதிலும் இளமை மாறாமல் இருக்கிறார். இப்போதும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசி ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் இவர். பல சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார்.

சினிமாவில் ஹீரோவின் மகன், தம்பி, கதாநாயகியின் தம்பி என சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர். இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான அன்னக்கிளி படத்தின் ஹீரோ கூட சிவக்குமார்தான். 70களில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: வாய்ப்பை தட்டி பறித்த நடிகர்.. ஆனாலும் நடிப்பை பார்த்து மிரண்டு போய் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை..

இவர் நடிப்பில் வெளிவந்த பத்திரகாளி, எங்கம்மா சபதம், ஆட்டுக்கார அலமேலும், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கண்னன் ஒரு கைக்குழந்தை, வண்டிச்சக்கரம் என பல படங்கள் ரசிகர்களை கவந்த திரைப்படங்களாகும். பல ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ரஜினி நடித்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வில்லனாக கூட நடித்திருந்தார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார்.

ஆனால், கடந்த பல வருடங்களாகவே அவர் சினிமாவில் நடிப்பதில்லை. இப்போது அவரின் மகன் சூர்யாவும், கார்த்தியும் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில், 60களில் அவர் சினிமாவில் நுழைந்த நேரத்தில் ஒரே நேரத்தில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருடன் நடிக்க வாய்ப்பு வந்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தினை தடுத்து நிறுத்தினேனா? இதுதான் நடந்தது ? மனம் திறந்த சிவக்குமார்..

ஒருநாள் எம்.ஜி.ஆரிடமிருந்து அழைப்பு வரவே அவரை பார்க்க போனார். தெலுங்கு படமொன்றை ரீமேக் செய்து ‘என் அண்ணன்’ என்கிற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடிக்க திட்டமிட்டிருந்தார். அந்த படத்தில் சோமன்பாபு செய்த வேடத்தில் சிவக்குமாரை நடிக்கவைக்க எம்.ஜி.ஆர் நினைத்தார். அந்த படத்தில் ஒரு சிவக்குமாருக்கு ஒரு பாடலும் இருந்தது. வாய்ப்பை விட சிவக்குமாருக்கு மனமில்லை.

ஆனால், அப்போது ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி நடித்து வந்த உயர்ந்த மனிதன் படத்தில் சிவக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவந்தார். இப்படம் முடியும் வரை வேறுபடத்திலும் நடிக்கக்கூடாது என ஒப்பந்தம் போட்டிருந்தனர். சிவக்குமார் கெஞ்சி பார்த்தும் ஏவிஎம் நிறுவனம் அனுமதி கொடுக்கவில்லை.

உயர்ந்த மனிதன் படப்பிடிப்புக்கு எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என எம்.ஜி.ஆரும் உறுதியளித்தார். ஆனாலும், சிவக்குமாரால் அந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. அதனால், அந்த வேடத்தில் முத்துராமன் நடித்தார். ஆனாலும், பின்னர் காவல்காரன், தெய்வத்தாய், இதயவீணை ஆகிய 3 படங்களில் எம்.ஜி.ஆருடன் சிவக்குமார் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ரசிகர் மன்றமே வைத்துக் கொள்ளாத சிவக்குமார்!.. அதற்கு காரணமாக இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள்…

 

Related Articles

Next Story